ஷங்கரின் ‘ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்க்வார் செனகர் வந்திருந்தார். ஆடியன்ஸ் 5 மணிக்கே வந்து விட, ரஜினி 6 மணிக்கே வந்துவிட, ஆர்னால்டோ 7 மணிக்கு மேல் தான் வந்தார்.
ஐந்து மணியிலிருந்து எல்லாரையும் பெரிய டி.விக்களில் மாற்றி மாற்றி காண்பித்தும், ரஜினியை பல கோணங்களில் காட்டியும் பொழுதை ஓட்ட வேண்டியிருந்தது. ஆர்னால்ட் வந்தவுடன் பாடிபில்டர்ஸ்களாக வைத்து ஒரு நடன நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆர்வமாகிப் போன ஆர்னால்ட் நேரே மேடையேறி மைக்கைப் பிடித்து பேச ஆரம்பிக்க, உடனே நிகழ்ச்சியை நடத்திய பாபி சிம்ஹாவும், சின்மயியும் மைக்கை அவரிடமிருந்து பிடுங்காத குறையாக பிடுங்க முயற்சிக்க அவர் ஓ.கே. நான் என் பாணியில் பேசுகிறேன் என்று ஷங்கர் நீங்கள் என்னை வைத்து ‘கோனன் தி கிங்’ எனறு அடுத்த படம் எடுக்க வேண்டும் என்று ஜாலியாகப் பேசிவிட்டு கிளம்பிப் போய்விட்டார்.
ஆர்னால்ட் ஆடியோ வெளியிடாமல் டக்கென்று கிளம்பிவிட்டதால் வேறு வழியின்றி கன்னட சூப்பர் ஸ்டார் புனித் குமார்ஆடியோவை வெளியிட ரஜினி பெற்றுக் கொண்டார். இவ்வளவு சொதப்பல்களிலும் ரஜினி கிளம்பி சென்றுவிடாமல் அமைதியாய் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து ஷங்கரைக் காப்பாற்றினார்.
வந்திருந்த ரசிகர்கள் ஆர்னால்ட்டுக்கு அவ்வளவு வரவேற்பு கொடுத்து அமர்க்களப்படுத்தினார்கள். ஷங்கர் ஆர்னால்ட்டின் நிகழ்ச்சி நிரலை சரியாக அமைத்துக் கொள்ளாமல், நேரந்தாழ்த்தி வந்தாலும் அதை சரி செய்ய வழி தெரியாமல் போனதால் நிகழ்ச்சி சொதப்பலாகி ஒப்பேற்றி முடிக்கப்பட்டது.