சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு கடந்த ஜூலை 15ல் ரிலீஸ் செய்யப்பட்ட மைக்ரோசாப்டின் புதிய இயங்கு தளம் (Operating System) ‘விண்டோஸ்-10’ ஜூலை 29ம் தேதி முதல் மார்க்கெட்டில் விற்கப்பட இருக்கிறது. மைக்ரோசாப்டின் டெஸ்க்டாப் மற்றும் டாப்லட் வகை கருவிகளில் இயங்கும்படியான இயங்குதளம் இது.
மைக்ரோசாப்டின் ‘தொடு வசதி’ எனப்படும் ‘டச் எனேபிள்'(touch enable) செய்யப்பட்ட முதல் இயங்குதளம் விண்டோஸ்-7 ஆகும். ஆனால் அது பாராட்டப்படத்தக்க வகையில் அதில் செயல்படுத்தப்படவில்லை. விண்டோஸ் 8 கூட தொடு வசதி உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டமே. தொடு வசதி ஸ்க்ரீன் உள்ள ஹார்ட்வேரில் இதை தொடுவசதிக்கோ அல்லது மௌஸ் வசதிக்கோ ஏற்ற மாதிரி ஸ்டார்ட் செய்யலாம். அப்படி டச் அல்லது மௌஸ் இவை இரண்டில் ஒரு நிலையை மட்டும் தேர்ந்தெடுத்தால் அதில் ஓ.எஸ் நன்றாக் வேலை செய்யும். ஆனால் மிக விரைவாக டச்சிலிருந்து மௌஸ் நிலைக்கோ அல்லது மௌஸிலிருந்து டச்சுக்கோ மாறினால் விண்டோஸ்-8 கதிகலங்கி நிற்கும். டச் நிலை டெஸ்க்டாப்பில் சரியாக வேலை செய்யாது. மௌஸ் நிலை டச் ஆப்களில் சரியாக வேலை செய்யாது.
விண்டோஸ்-10 ல் இந்தக் குறைபாடுகள் ‘கான்டினம்’ வசதியின் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளன. எனவே விண்டோஸ்-10 உள்ள ஒரு போனை ஒரு பெரிய டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் கனெக்ட் செய்து மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற விண்டோ சப்போர்ட் உள்ள அப்ளிகேஷன்களை மொபைல் போனிலிருந்தே இயக்க முடியும். இதேபோல டெஸ்க்டாப் அப்ளிகேஷனில் ‘டேப்லட் மோட்’ நிலை வேலை செய்யுமா என்று செக் செய்து அதற்கு மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ்-10 கான்டினம் டச்சுக்கும், டெஸ்க்டாப்பிற்குமான விண்டோஸ் இடைவெளியைக் குறைக்கும் என்று நம்பலாம்.