பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இணையம் இந்தியாவில் பிரபலமானதும் இந்துத்துவா ஆட்கள் குறிவைத்தது இணைய தளங்களைத் தான். பாடப்புத்தகங்களில் வரலாற்றைத் திரிப்பது முதல், கோட்சேவுக்கு சிலை வைப்பது வரை இந்தச் சில்மிஷங்கள்ஆங்காங்கே நடைபெறும். ஆளும் பி.ஜே.பி அரசோ கண்டுக்காமல் இருக்கும்.

அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக வந்திருப்பது தான் நேருவின் தாத்தா பற்றிய விஷயம். விக்கிபீடியா என்கிற இணைய தளத்தில் நேருவைப் பற்றிய ஒரு பக்கம் உண்டு. கடந்த ஜூன் 26ஆம் தேதி அதில் யாரோ நேருவின் தாத்தா கங்காதர் ஒரு முஸ்லீம் என்றும், கியாசுதின் காஸீ என்கிற தனது முஸ்லீம் பெயரை வெள்ளைக்காரர்களுக்குப் பயந்து கங்காதர் என்று மாற்றிக் கொண்டார் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம், நீக்கலாம். அதைப் பயன்படுத்தி யாரோ இப்படி மாற்றி தகவல்கள் போட்டிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி நேருவுக்கும், எட்வினா மௌன்ட்பேட்டனுக்கும் இடையேயான உறவையும் பற்றி விஷமத்தனமாகவும் ‘பிட்’டுகளை சேர்த்திருக்கிறார்கள். இதே போல மோதிலால் நேருவின் விக்கிபீடியா பக்கத்திலும் திருத்தல் வேலைகள் செய்திருக்கிறார்கள்.

இதை நைசாகச் செய்தவர்கள் யார் என்று செக் செய்தபோது இதை எடிட் பண்ணியவர் என்.ஐ.சி (நேஷனல் இன்பார்மேடிக்ஸ் சென்டர்) எனப்படும் அரசு அலுவலகத்திலிருந்து தான் இந்த திருத்தங்களை செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் யார் செய்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

யார் செஞ்சதுன்னுதான் நமக்கு நல்லா தெரியுமே ஸார் !!

Related Images: