பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க குறளரசன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து, இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர் குறளரசன் இருவருக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் மோதல் ஏற்பட்டது.அதனால் படத்தின் தயாரிப்பு வேலைகளில் சிக்கல் வரலாம் எனஅஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்துக்காக குறளரசன் இசையமைத்திருக்கும் பாடல்களில் ஒரு பாடலை மட்டும் விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. அதற்குப் பின் படத்தின் இசை வெளியீட்டையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் சிம்பு.
பாண்டிராஜ், குறளரசனிடையேயான போட்டிச் சண்டை எப்போது முடிந்து பாடல்கல் எப்போது ரிலீசாகும் என்பதெல்லாம் புரியாத புதிர்.