இந்திய போலீஸூம், உலகப் போலீஸூம் 25 வருடங்களாகத் தேடி வந்த நிழலுக தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் பாலியில் கைது செய்யப்பட்டார் என்று தகவல் வருகிறது. உடனே அவர் நான் சரண்டர் ஆகவேயில்லை என்கிறார்.
இந்திய அரசு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தாவூத் இப்ராஹிமைத் தான் தேடுகிறது. சோட்டாராஜன் அவரது முன்னாள் கூட்டாளி. இன்னாள் எதிரி. அவர் தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுக்கலாம் ஒருவேளை.
சோட்டாராஜனின் மேல் சுமார் 75 வழக்குகள் இருக்கின்றன. அவற்றில் இரு வழக்குகள் ரொம்ப முக்கியமானவை. அவற்றில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு இல்லை. பத்திரிக்கையாளர் ஜெ.தே கொலைவழக்கு மற்றும் தாவூத் இப்ராஹீம் வீட்டிற்கு வெளியே ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு. இவை தான் அந்த வழக்குகள்.
இந்த வழக்குகளுக்காகத் தான் சோட்டாராஜனை ஸ்பெஷல் ப்ளைட் வைத்து கூட்டி வருகிறதா இந்தியா ? சோட்டா ராஜன் அப்ரூவராக மாறும் பட்சத்தில் அவரது உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்படுகிறது. ஆனால் பத்திரிக்கைகள் அவர் வரும் ஸ்பெஷல் விமானம் ஏர்ப்போர்ட்டில் எந்த கேட்டில் நிற்கிறது என்பது வரை டீட்டெய்ல்கள் தருகின்றன. டி.வி.க்களில் அனேகமாக அவர் குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர மற்ற எல்லா செயல்களும் காண்பிக்கிறார்கள். அவ்வளவு ரகசியமாக அவரை அழைத்து வருகிறது இந்திய அரசு.
சோட்டாராஜனுக்கு கிட்னி பழுதாயிருப்பதால் அவருக்கு டயாலிசிஸ் ரெகுலராக செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் ஆள் காலி. அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் செய்யப்படவும் இருக்கிறது. இதெல்லாம் சி.பி.ஐ மக்களுக்கு சோட்டாராஜனைப் பற்றி தரும் தகவல்கள். சோட்டாராஜனை ஏன் மீடியாக்கள் இவ்வளவு போகஸ் செய்கின்றன ? மத்திய பா.ஜ.க அரசு இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் படு தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்களிடம் காட்டுவதற்காவா?
மும்பை போலீஸில் தாவூத் இப்ராஹிமுக்கு வேண்டிய ஆட்கள் இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் நமக்கு தரப்படுகிறது. நாளை சோட்டா ராஜன் தப்பித்து விட்டால் அவர்கள் தான் காரணம் என்று சொல்லப்படுமா ? தெரியவில்லை.
மொத்தத்தில் இவை அனைத்தும் ஏதோ நாடகம் போலும் அதில் சோட்டாராஜன் ஒரு பாத்திரம் போலும் தோன்றுகிறது. சரி அப்போ இயக்குனர் யார்?