மு.கு; இச்செய்தியை மூச்சுவிடாமல் படிக்க முயன்று ஏற்படும் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. மருத்துவச்செலவுகள் என்றில்லை, டீ பிஸ்கெட்டு கூட வாங்கித்தரப்பட மாட்டாது.
’உன்னோடு கா’ படத்தை ஆர்.கே. இயக்க, அபிராமி மெகா மால் சார்பில் நல்லமை ராமநாதன் தயாரிக்க, நெடுஞ்சாலை ஆரி நாயகனாக நடிக்க,அவருக்கு இணையாக டார்லிங் 2′ பல் டாக்டர் மாயா நடிக்க,இன்னொரு பக்கம் பால சரவணன் – மிஷா கோசல் ஜோடி அவர்களுக்கு இணையானமுக்கியக் கதா பாத்திரங்களில் நடிக்க, மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நட்சத்திர நடிகர்கள் பிரபு, ஊர்வசி, ஆகியோருடன் தென்னவன்,மன்சூர்அலிகான், மனோ பாலா, இலங்கை ரஞ்சனி, சுப்பு பஞ்சு, சண்முக சுந்தரம்,சாம்ஸ், ராஜா சிங் மற்றும் பலர் நடிக்கும்’உன்னோடு கா’ படத்தின் கதையை டைரக்டரிடம் இருந்து கைப்பற்றி தன் பெயரைப் போட்டுக்கொண்டிருக்கும் அபிராமி ராமநாதன் இப்படத்தைத் தயாரிக்க முக்கிய காரணமாக நாயகி மாயா இருக்க,இப்பட குழுவினர் சமிபத்தில் பிரம்மாண்ட திருமண காட்சியை EVP பார்க்கில் செட் அமைக்க அந்தசெட் மிகவும் அழகாகவும் மிக பிரம்மாண்டமாகவும் அமைந்து இருக்க,பல்வேறு ரசிகர்கள் அந்த செட்டை ஒரு காட்சிபொருள் போன்று பார்க்க, ஒரு கட்டத்தில் ஜனங்களின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் இருக்க, அதையும் மீறி ஒளிப்பதிவாளர் சக்தி படம் பிடிக்க…..ஷ்ஷ்ஷ்… ஷப ஷப ஷப…..ப்ரஸ் ரிலீஸ் அனுப்புறதுக்கு முந்தி ஒரு தடவை படிச்சிட்டு அனுப்புங்க பி.ஆர்.ஓ. பெருமக்களே…