பத்துப்பைசா பெறாத கதையை ஒரே நேரத்தில் நாலைந்துபேர் சுட்டு படம் எடுப்பதும், அந்தப் பத்துப்பைசாவுக்கும் கூட தகுதியில்லாத கதைகளை ரீமேக் பண்ண ரைட்ஸ் வாங்குவதும் கோடம்பாக்கத்தில் அடிக்கடி நடக்கும் அட்ராசிட்டிகள். இந்த அட்ராசிட்டி அதுக்கும் மேல. தெலுங்கில் ஹிட் அடித்த படுபயங்கர மசாலாப்படமான ‘டெம்பர்’ படத்தின் உரிமையை வாங்க சிம்புவும் விஷாலும் அடித்துக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் இது அரதப்பழசான ரவுடி போலீஸாகி ரவுடிகளைப் பழிவாங்கும் கதைதான்,
முதலில் இந்த படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிப்பதாகதான் செய்திகள் கசிந்தன. வாலு பட இயக்குனரே இதை ரீமேக் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக முடிவு செய்யப்பட்டு சிம்புவுக்கு இரண்டு கோடி அட்வான்சும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இதே படத்தின் ரீமேக் ரைட்ஸ் உரிமையை பெற்று அதில் நடிக்கவிருக்கிறார் விஷால். இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் டெம்ப்பர் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார் என்றும், அதை அனல் அரசு இயக்கப் போவதில்லை என்றும் விஷால் தரப்பிலிருந்தே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அப்படியென்றால் சிம்பு டென்ஷன் ஆகிவிடுவாரே? அப்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இது தொடர்பாக சிம்புவிடம் விளக்கம் கேடால், ‘எனக்கு ஒண்ணும் தெரியலைங்க. நீங்க தயாரிப்பாளரைதான் கேட்கணும்’ என்ற வழக்கமான தெனாவட்டோடு பதில் தருகிறார்.
சப்பை மேட்டருக்கு அடிச்சிக்கிறதை நிறுத்திட்டு கொஞ்சம் தரமான சமாச்சாரத்துக்கு மோதுங்க பாஸ்…