கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, பகுதியில் தென்னை மரங்கள் மிக அதிகம். தென்னம்பிள்ளை என அதை பிள்ளைக்கு ஒப்பிட்டு சொல்லும் மரபு கொங்குமண்ணில் உண்டு. பெற்ற பிள்ளை சோறுபோடாவிட்டாலும் தென்னம்பிள்ளை சோறுபோடும் என்பதே அதன் அடிப்படை.
கள்ளுக்கு தடை விதித்து சீமைசரக்கை விற்க ஆரம்பித்தது ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாயில் விற்றது தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்டிரால் என கதை கட்டிவிட்டது இப்படி பல காரணங்களால தென்னை விவசாயம் படுத்துவிட்டது.

1980களில் தான் தேங்காய் எண்ணெய்க்கான ஆப்பு வைக்கபட்டது,. வைக்கபட்டது அமெரிக்காவில். அன்று சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் பொறிக்க தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்னெயில் பொறித்த பாப்கார்னின் சுவையே தனி. அத்துடன் மேலே பட்டரை ஊற்றி கொடுப்பார்கள். அதுபோக ஓரியோ உள்ளிட்ட பல ரெடிமேட் உணவுகளில் பாமாயில் மற்றும் தேங்காய் எண்னெயில் தயாரிக்கபட்டன.

ஆனால் அமெரிக்காவில் தேங்காய் எண்ணெயும், பாமாயிலும் விளைவது கிடையாது. முழுக்க மலேசிய இறக்குமதி. அதனால் அமெரிக்காவில் சோயாபீன் உற்பத்தி செய்யும் கம்பனிகள் ஒன்றுகூடி “தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலில் நிரைவுற்ற கொழுப்பு இருக்கு. இதை தின்றால் மாரடைப்பு வரும்” என பிரசாரம் செய்தார்கள்.

குறிப்பு: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பாமாயில் நம் ஊர் ரேசன்கடைக்கு அனுப்பப்பட்ட உடல்நலனுக்கு கெடுதலான பாமாயில் அல்ல. அது முதல் தர பாம்கெர்னல் ஆயில். தேங்காய் எண்ணெய்க்கு ஒப்பான சக்தி கொண்டது.

அமெரிக்க காங்கிரஸில் தேங்காய் எண்ணெய்யை நிறைவுற்ற கொழுப்புஎன அறிவிக்க தீர்மானம் போட இருந்தார்கள். இப்படி தீர்மானம் போட்டால் தேங்காய் எண்ணெய் வணிகமே அழிந்துவிடும், ஏனெனில் அமெரிக்காவில் என்ன சட்டமோ அதுதான் ஐரோப்பிய நாடுகளிலும் சட்டமாகும் என அஞ்சிய மலேசிய அரசு ரத, கஜ துரக பதாதிகளை களத்தில் இறக்கியது. (ஆனால் இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற தென்னைமர நாடுகளையும் அவர்கள் கூட்டு சேர்த்து கொன்டிருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவும் தேமே என்று இருந்துவிட்டது).

மலேசிய விஞ்ஞானிகள் குழு ஒன்று அமெரிக்கா போய் இறங்கியது. பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றையும் ஆணித்திரமாக மறுத்து தேங்காய் எண்னெய் உடலுக்கு எப்படி நல்லது என விளக்கினார்கள்.ஆனால் இப்படி விவாதம் நடக்க, நடக்க மக்களிடையே “தேங்காய் எண்ணெயில் ஏதோ கெடுதல்” என்ற எண்ணம் பரவிவிட்டது. சோயாபீன் ஆயில் கம்பனிகள் தென்ங்காய் எண்ணெய்க்கு எதிரான விளம்பரங்களை அள்ளிவிட்டன. பலபில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகம் அது.

இறுதியில் மலேசிய அரசு ஒரு பிராம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது
“சோயாபீன் ஆயிலில் டிரான்ஸ்பேட் இருக்கு” என்ற பிராம்மாஸ்திரம் தான் அது. அதுவரை அந்த உண்மையை வெளியே வராமல் பொத்தி, பொத்தி வைத்திருந்தன இக்கம்பனிகள். டிரான்ஸ்பேட்டுக்கு எதிரான விளம்பரங்களை மலேசிய அரசு வெளியிட்டதும் பதறிபோன சோயாபீன் கம்பனிகள் மலேசிய தூதுகுழுவை சந்தித்து “சரி இனிமேல் உங்களை தாக்கமாட்டோம். நீங்களும் ஊர் போய்விடுங்கள்” என ஒப்பந்தம் போட்டுகொண்டார்கள்.

மலேசியா தூதுகுழு வெற்றிகரமாக ஊர் திரும்பியது. ஆனால் அதன்பின் சத்தமே இல்லாமல் ஒவ்வொரு பன்னாட்டு கம்பனியாக குறிவைத்து “தேங்காய் எண்ணெயில் நிரைவுற்ற கொழுப்பு உள்ளது. பதிலுக்கு சோயாபீன் ஆயில் பயன்படுத்துங்கள்” என தனிதனியாக சந்தித்துபேசி கவிழ்த்தார்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொரு கம்பனியாக நாங்கள் இனிமேல் சோயாபீன் ஆயிலை தான் பயன்படுத்துவோம் என அறிவித்தன

ஆனால் சொல்வது எளிது, செய்வது கடினம்..தேங்காய் எண்ணெய்+பட்டர் பாப்கார்னின் சுவையை சோயாபீன் ஆயிலில் கொண்டே வரமுடியவில்லை. அதேபோல ஓரியோவில் பாமாயில் தந்த சுவையை சோயாபீன் ஆயிலால் தரமுடியவில்லை. பலகோடி டாலர்கள் செலவு செய்து கூட செயற்கை கெமிக்கல்+பிரச்ர்வேடிவ்களை சேர்த்தே இயற்கையான தேங்காய் எண்ணெயின் சுவையை கொன்டுவந்தார்கள்

ஆக இப்படித்தான் தென்னைவணிகம் அமெரிக்க, ஐரோப்பாவில் வீழ்ச்சியடைந்தது.
இதெல்லாம் நடக்கையில் நம் அரசு மிக்சர் சாப்பிட்டுகொன்டிருந்ததாக தெரிகிறது..அன்று மலேசியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மிகபெரிய தவறு செய்துவிட்டது நம் அரசு

முகநூலில் written by Neander Selvan

Related Images: