சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து கதவைத்தட்டுகிறது. அந்த வகையில் ஆகப்பெரிய அதிர்ஷ்டசாலி நடிகர் கருணாஸ்தான். முந்தா நாள்’முக்குலத்தோர் புலிப்படை’ என்கிற அமைப்பு தொடங்கி, நேற்று முதல்வர் ஜெயலலிதாவிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, இன்று திருவாடனை தொகுதியில் சீட்டும் பெற்றார் கருணாஸ்.
இதே ஒரு சீட்டைப் பெற ‘மானஸ்தன்’ சரத்குமார் பட்டபாடு தமிழத்தின் பட்டிதொட்டியெல்லாம் அறியும். அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சன் டி.விக்கும் மாறன் வகையறாக்களுக்கும் செல்லபிள்ளையாக இருந்து வந்த கருணாஸுக்கு அத்முகவில் சீட் கிடைத்ததையே அரசியல் வட்டாரம் ஹார்ட் அட்டாக்கோடு எதிர்கொண்டிருக்கும் வேளையில் ‘பாருங்க. அம்மா என்னைக் கண்டிப்பா கல்வி அமைச்சராக்கி அழகு பாப்பாங்க’ என்று கண்சிமிட்டுகிறார் கருணாஸ்.
பி,கு: கருணாஸ் மழைக்குக்கூட பள்ளிக்கூடம் இருக்கிற பக்கங்களில் ஒதுங்கியதில்லை. ஒரு கல்வி அமைச்சருக்கு இதைவிட என்ன தகுதி வேண்டும்?