தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை தன் கையில் வைத்திருந்தாலும், தனக்கென ஒரு அங்கீகாரத்தை மக்கள் மனதில் பெற்ற நடிகை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருப்பவர் ஜனனி ஐயர். இவர் தனது பிறந்தநாள் விழாவை நேற்று ‘உல்ட்டா’ படக்குழுவினருடன் ’உற்சாகத்துடன்’ கொண்டாடினார். இதுமாதிரியான ஓர் பிறந்தநாள் விழா தமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும் ஹீரோ ரமீஸ் ராஜாவின் அந்த இன்ப அதிர்ச்சியை தான் சற்றும் எதிர்பாரக்கவில்லை என்றும் மலர்கிறார் ஜனனி ஐயர்.
ஆனால் அந்த இன்ப அதிர்ச்சி என்ன என்பதைஅவர் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் உல்ட்டா திரைப்படம் பற்றி கூறுகையில், ” இன்று நான் நடித்த காட்சிகள் அனைத்தும் மிகுந்த சவால் நிறைந்தவை. இதுபோன்ற காட்சிகளில் நான் நடிப்பதற்கு எனது குரு, இயக்குனர் பாலா தான் காரணம். ’அவன் இவன்’ படப்பிடிப்பின்போது எவ்வளவோ டார்ச்சர் செய்திருந்தாலும், அவரின் மாணவி நான், என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்” என்கிறார் ஜனனி.
சைக்காலாஜிக்கல் காமெடி’ மூவியாக உருவாகி கொண்டிருப்பது உல்ட்டா திரைப்படம். ரைட் மீடியா தயாரிக்கும் இத்திரைப்படத்தை, அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி இயக்குகிறார்; இவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் அசோசியேட் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முருகதாஸின் உதவி இயக்குநர்களில் ஒருவர் கூட இதுவரை உருப்படியான படங்கள் எதுவும் தரவில்லை என்பது அதையும் விட குறிப்பிடத்தக்கது.