தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் இறந்த சேதி நேற்று இணையத்தில் இயக்குனர் ஜான் மகேந்திரன் பகிர்ந்திருந்தார். பலருக்கு அவர் சிறந்த நடிகர். சிலருக்கு அவர் சிறந்த தந்தை . சிலருக்கே அவர் நவ இந்திய சினிமாவின் கொண்டாடப்பட வேண்டிய ஆளுமை. காரணம் அவர் கடந்த 25 வருடத்துக்கு மேலாக நடத்தி வரும் கொல்லப்புடி சீனீவாவாஸ் விருது நிகழ்ச்சி.
அவரது மகன் சீனிவாஸ்.அஜீத் நடித்த முதல் படமான காதல் கடிதம் இயக்குனர் . படப்பிடிப்பின் போதே விபத்தில் இறந்து போனார். அதனால் மிகவும் மன வேதனையுற்ற மாருதிராவ்
ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டில் இந்திய அறிமுக இயக்குனர்களின் படங்களில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னை ம்யூஸிக் அகாதமியில் மிகச்சிறப்பான ஒரு விழாவை நடத்தி அந்த இயக்குனருக்கு மிகப்பெரிய கவுரவத்தை உண்டாக்கித் தருவார்.
அது பல உதவி இயக்குநர்களுக்கு நாமும் முதல் படம் இதை போல சிறந்த படத்தை எடுத்து கொல்லப்புடி விருது வாங்கவேண்டும் என்ற உத்வேகத்தை தரும் . ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் வந்தாலே இந்த வருட கொல்லப்புடி விருது யாருக்கு என பார்ப்பதோடு நில்லாமல் விழா விலும் கலந்து கொள்வேன். இந் நிகழ்ச்சியை அவர் ஹைதராபாத்தில் நடத்தாமல் ஏன் சென்னையில் நடத்துகிறார் என பல முறை யோசித்தி ருக்கிறென். அவ்வகையில் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் சென்னைக்கும் பெருமை சேர்த்த மாருதிராவ் அவர்களுக்கு புகழஞ்சலி
முகநூலில் அஜயன் பாலா…