WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]SELECT SQL_CALC_FOUND_ROWS all
FROM 4bz_posts
WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish')))
ORDER BY 4bz_posts.post_date DESC
LIMIT 0, 15
ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கு! (ச.பாலமுருகன்) 8.12.2019
பாராளுமன்றத்தில் நாளை 9.12.2019 ல் குடியுரிமை திருத்த சட்டம் விவாதத்திற்கு வருகிறது. இந்த சட்டம் இந்தியாவின் மதச் சார்பின்மை கருத்தை புதைக்க உள்ளது. பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் இல்லாதவர்களை இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்துள்ளது.
தமிழர்களாகிய நமது முக்கிய கோரிக்கையான 1983 க்கு பின்னர் இலங்கையிலிருந்து வந்து பல்வேறு முகாம்களில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இந்தியாவையே வாழிடமாக ஏற்றுக்கொண்டவர்கள்.இங்கேயே வாழ விரும்புபவர்கள். 2014 ஆண்டு டாடா சமூக ஆய்வு நிருவனமும், டேனிஸ் அகதிகள் கவுன்சிலும் இணைந்து நடத்திய ஆய்வில் 79 % அகதிகள் இந்தியாவை தாயகமாக கருதுவது வெளிப்பட்டது. இந்தியாவோடு தொப்புள் கொடி உறவுள்ள இம் மக்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என பல ஆண்டு கோரிக்கை காங்கிரஸ் காலத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது.
இச் சூழலில் கடந்த 2016 ஆண்டு ப.ஜ.கா கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வந்ததால் பின் பாராளுமன்றம் நிலை குழு ஆய்வுக்கு அனுப்பப் பட்டது.7.1.2019 அக் குழு உறுப்பினர்கள் ஈழ தமிழர்களையும், திபத்திய புத்த மத அகதிகளுக்கும் குடியுரிமை தரலாம் என பரிந்துரித்தனர். ஆனால் மத்திய உள் துறை அமைச்சகம் தாங்கள் குடியுரிமை வழங்குவது குறித்து 29.12.2011 தேதியிட்ட ஒரு நிலைப்பாட்டு நடைமுறையை கடைபிடிப்பதாகவும் (standing operative procedure) அதன் படி வெளிநாட்டை சார்ந்த போரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட கால விசாவில் இங்கே தங்கிக் கொள்ளலாம் குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறி ஈழ தமிழர்களை குடியுரிமை சட்டத்தில் இணைக்கவில்லை.
ஆனால் இதற்கு முரணாக பாக்,ஆப்கான்,பங்களாதேஷ் என்ற நாடுகளின் (வெளிநாட்டினர்) முஸ்லீம் அல்லாதாரை மட்டும் குடியுரிமை தர சட்டம் கொண்டு வருவது தமிழ் சமூகத்திற்கு செய்யும் அநீதியாகும்.
பாகிஸ்தான்காரன் ஒருவன் இந்தியனாகலாம். ஆப்கானிஸ்தானியன் இந்தியனாகலாம். பங்களாதேஷி இந்தியனாகலாம். ஈழத்தின் தமிழன் இந்தியனாகக் கூடாது. இது என்ன நீதி ? தமிழன் இந்தியனாகத் தகுதியில்லாதவனா ?
இது காஷ்மீரிகளை பாராளுமன்றம் மூலம் 370 சட்டப் பிரிவை நீக்கி அநீதி செய்ததற்கு இணையானது.
ஈழ தமிழர்கள் படிப்பு,வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சுய மரியாதை இழந்துள்ளனர்.அகதிகளாய் இருப்பதால் இந்த கூடுதல் அவலம். மதத்தால் மக்களின் குடியுரிமை முடிவு செய்வதில் எந்த சிறு உடன்பாடும் கிடையாது. ஆனால் ஒரு வாதத்திற்காக எடுத்தாலும், ஈழ மக்களில் உள்ள இஸ்லாமியவர்கள் இல்லாதோருக்கு அல்லது அவர்களின் கூற்றுப்படி “அக் மார்க்” இந்துக்களுக்கு கூட ப.ஜ.கா குடியுரிமை மறுப்பதேன்? தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அவ்வளவு வன்மமா?
தி.மு.க அதன் கூட்டணி கட்சியினர் இந்த சட்டத்திருத்தத்தை தடுக்கவில்லை என்றால் அது பெரும் வரலாற்று பிழையாக மாறும். (மு.க. ஸ்டாலின் இன்னும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. கலைஞர் 2008ல் செய்த பிழையை ஸ்டாலின் தொடரப் போகிறாரா ?)
ஈழத் தமிழர்களை தேர்தல் லாபத்திற்கு மட்டும் பார்க்கும் அவல நிலையால் இந்த அவலம் வந்துள்ளது.
மனித உரிமை பார்வையில் ஈழத் தமிழ் அகதிகளின் இந்திய குடியுரிமைக்கு குரல் கொடுங்கள்!
——————
இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் விசிக எம்.பி. ரவிக்குமார் ஈழத்தமிழருக்கு குடியுரிமை பற்றி இன்று கேள்வி எழுப்பினார்.
“ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா?
அவ்வாறெனில்விவரங்களைத்தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று கேட்டிருந்தார்.
அதற்கு எழுத்துபூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள பதிலில்:
“ இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் வெளியுறவுத்துறை இணையமைச்சர்.
அந்நிய நாட்டுக்காரனாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டுக்காரர் என்றாலும் இந்துவாக இருந்தால் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தமிழ் பேசும் தமிழீழ தொப்புள்கொடி உறவுகளுக்கு அது குடியுரிமை தரப்படாது.
இதுதான் இன்றைய ‘ஹிந்தி’யா தமிழர்களுக்கு வழங்கும் நீதி.