1) போலீஸ், தாடி வைக்கக்கூடாது…தலை ஹிப்பி மாதிரி வளர்க்க முடியாது..

2) கமிஷனர் வாகனத்திற்கு எண் இருக்காது..

3)என்னதான் கமிஷனராக இருந்தாலும், மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து மீட்டிங் போட முடியாது.

4)சஸ்பென்சனையும், இடமாறுதலையும் ஒரே உத்தரவில் கொடுக்க A.R முருகதாஸால் மட்டுமே முடியும்..

5)கைது செய்யப்பட்ட வில்லன் மகன், கமிஷனர் அலுவலகத்திலேயா அடைக்கப்பட்டிருப்பான்?

6)வில்லன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி பெயில் ஆர்டரை காண்பிப்பாரா?

7)மனித உரிமை ஆணையம் என்று அந்த பெரிய மனுஷி பயணிக்கும் வாகனத்தில் காட்டிவிட்டு, மனித உரிமை கழகம் என்று வசனம் பேசுவது எந்த ஊர் நியாயம்?

8)மூளையில் ரத்தக் கசிவு மூன்று இடங்களில் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் இறக்கப் போகும் பெண்ணிடம், எந்த மருத்துவராவது நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப் போகிறாய் என்று சொல்வாரா?

9) மூளையில் மூன்று இடங்களில் ரத்தக் கசிவு ஏற்படும் பெண்ணால் தெளிவாக எப்படி பேச முடிகிறது?

10)இந்த திரைப்படத்திற்கு நயந்தாரா எதற்கு? இறுதியில் என்ன ஆனார்?

11)சண்டைக் காட்சிகள் ஒரு துளியேனும் நம்பும்படி இருக்கிறதா? இயல்பாக இல்லாவிடினும் இயல்பிற்கு பக்கமாகவாவது எடுக்க வேண்டாமா?

இந்த லாஜிக்கெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…

பஞ்ச் டயலாக்க கூட கேக்க விடாம அந்த அனிருத் பையன், எல்லா இசைக் கருவிகளையும் உச்சஸ்தாயில அலற விட்டு, தலைவர் கிழி, கிழி ன்னு சொன்னத வச்சு, நம்ம செவித்திரையை கிழிச்சிட்டான்…ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல…

எப்படியாவது படத்த முடிக்கணும்னு இயக்குநர் தட்டு தடுமாறி முடிச்சிருக்காரு…

படத்தின் ஆறுதல் யோகிபாபுவின் சின்னச் சின்ன நகைச்சுவையும், சூப்பர் ஸ்டாரின் வயதிற்கு மீறிய வேகத்துடிப்பும், மகளாக நடித்த பெண்ணின் நடிப்பும்தான்…

ஆனாலும் அந்த முதியவர இப்படி பாடாய் படுத்தியிருக்க வேணாம்…

முகநூலில்…Lakshmi RS

Related Images: