சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான பி.ஹெச்.பாண்டியன் (74), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார். இவர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் 1945-ஆம் ஆண்டு மார்ச் 29-ல் பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

தமிழக சட்டப்பேரவைக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை நிரூபித்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அஇஅதிமுக சட்ட ஆலோசகருமான டாக்டர் பி.ஹெச்.பாண்டியன் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் காலமானார்.

அஇஅதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் துவங்கியபோது அவருக்கு பக்கபலமாக இருந்தவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சோதனையான காலகட்டங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் போன்ற சிறப்புக்குரியவர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார். கடந்த 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு நெல்லை மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்வாகியிருந்தார். பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Images: