முலைவரி இருந்த திருவிதாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் (நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள் ளிட்ட “18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்” எனப்பட்டது. ஆண்களும் மேல் சட்டை, துண்டு அணிய முடியாது.)
இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மேலாடை இன்றிதான் உயர்சாதியினருக்கு மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயாராக, பாட்டியாக, இருந்தாலும் மேலாடை இன்றிதான் இருக்க வேண்டும்.
இந்த இந்துத்துவ அடக்கு முறையை கூறும்போது கண்டிப்பாக ‘நங்கேலி’ என்ற பெண்ணைப்பற்றி கூறியே ஆகவேண்டும்.
நடந்த காலம்: சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், இடம்: திருவிதாங்கூர் இராஜ்யம், நங்கேலி என்னும் பெண்ணின் கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நங்கேலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நங்கேலி’ என்பது தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப்பட்டது.)
அதைத் தொடர்ந்து, மார்பக வரி வசூலிப்பவர்களை நங்கேலியின் விட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நங்கேலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினாள். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கரம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
முலைக்கரம் பார்வத்தியார் அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நங்கேலியை தேடிப் போய் விட்டார். வரி கொடுக்காவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று எச்சரித்தார்.
நங்கேலி தன் வீட்டுக்கு வந்த அவரை “சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன்” என்று வீட்டிற்குள் சென்றாள். ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
பின்னர் இதைத் தொடர்ந்து மார்பக வரிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ ஆரம்பித்தனர். கடும் போராட்ட நடவடிக்கைகளுக்குப் பின், அது திருவிதாங்கூர் சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அழகி நங்கேலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் முலைவரி என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை முலைச்சிபரம்பு என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி” என அவரைப் பாராட்டுகிறார்கள்.
இந்த வரலாறுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்கு முறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய் படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.
திருவிதாங்கூர் சமஸ்தானம் (கன்னியாகுமரி மாவட்டம் உட்பட ) “ராமராஜியம்” நடத்திய போது அங்கிருந்த பெண்களின் கதி இது தான்.
இனியொரு முறை “ராமராஜியம்” என்று எவரும் நம் காதில் பூ சுத்தினால், அவர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரானவர்கள் என்று அறிவீராக…!
- Vijay C