மலேசியாவில் உள்ள மோனாஷ் பயோ யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி மருத்துவர்கள் ஐவர்மெக்ட்டின் என்கிற பேன், பொடுகுகளை கொல்ல பயன்படும் மருந்து கொரோனா வைரஸை கொல்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியை நடத்தி வரும் கைய்லி வேக்ஸ்டாப் எனும் பெண் ஆராய்ச்சி மருத்துவர் ஒரு டோஸ் ஐவர்மெக்டின் மருந்து கோரனா -19 வைரஸை செல்லில் மேலும் வளராமல் 48 மணி நேரத்தில் தடுத்து கொல்கிறது என்று ஆய்வகத்தில் காட்டியுள்ளார்.
இவர் கடந்த பத்து வருடங்களாக ஐவர்மெக்டின் மருந்தை பற்றி ஆராய்ந்து வருகிறார். இதே மருந்து சார்ஸ், ஹெச்.ஐ.வி, டெங்கு போன்ற நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
ஐவர்மெக்டின் உலகம் முழுவதும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வரும் மருந்து என்பதால் இதிலிருந்து எளிதில் உலகம் முழுவதும் மருந்து தயாரித்துக் கொள்ள முடியும்.
எந்த அளவு இந்த மருந்தை உட்கொண்டால் அது மனித உடலிலுள்ள கொரோனா வைரஸை கொல்லும் என்பதை அறிந்ததும் இம்மருந்தை மனிதருக்கு தர முடியுமா? என்று முடிவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீக்கிரம் ஏதாவது மருந்தைக் கண்டுபிடிச்சுத் தாம்மா ! இங்கே மணியடிக்கிறது, விளக்கேத்துறதுன்னு மூடநம்பிக்கைகளை பேசிட்டு ஒரு நாடே அலையுது.