99% LOADING……… என்பதன் பிறகு, FAILED என்பது எவ்வளவு ஏமாற்றமானது.
உண்மையில் எங்கள் இயக்குனர் வாழ்வில் நடந்தது அதுதான்.
இந்த ப்ரபஞ்சம் ஒரு கருணைக்கடல்.. மனமுருகி அதனிடம் கேட்கப்படும் ஒவ்வொன்றயும் அது தந்தே தீரும்..இதுதான் எங்கள் இயக்குனர், 4G திரைப்படத்திற்கு எடுத்துக்கொண்ட கரு.
ஆனால், அவருக்கு இந்த ப்ரபஞ்சம் ஒரு இரக்கமற்ற அரக்கனாக மட்டுமே இருந்துத் தொலைந்து விட்டது.
தமிழ் திரையுலகின் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வர வேண்டிய ஒரு நபர், தனது திரைப்படத்தின் 99% வேலைகளை முடித்தும், ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே 4 ஆண்டுகளாய் மிச்சமிருந்து, அந்த கருவின் சுமையை சுமந்து கொண்டே ஒவ்வொரு நாளையும் தாங்க முடியா வலியுடனும், தடுத்து விட முடியாத தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்த அந்த உயிர் இன்று ஒருவழியாய் சுமையை இறக்கிவிட்டு ஓய்வெடுத்துவிட்டது.
பல ஆண்டுகளாக, “என்ன பண்ற?? “ என எனை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் “ TRY பண்ணிட்டுருக்கேன்” எனும் எனது பதில்களுக்கு பதிலாக, “ASSISTANT DIRECTORஆ இருக்கேன்” என சொல்லும் அந்தஸ்தை தந்தவர்.
4Gல்”எல்லா ASSISTANTSம் புதுசா இருக்கானுங்க… தனி தனி DEPARTMENT பாக்க விட்டுருக்கீங்க?? RISK எடுக்குறீங்க அருண்” என ஒருவர் கேட்ட போது“ பசங்க பாத்துக்குவானுங்க” என சிரிப்பை பதிலாய் தந்தவர்.
MONTAGESகளோ, CASTING IDEAகளோ சொல்லி பிடித்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களிடம் “இவன் IDEAதான் இது” என அந்த இடத்திலேயே அதற்கான CREDITSஐக் கொடுத்தவர்.
“ சொல்றா தம்பி” “ எப்புட்றா தம்பி இருக்க?” “என்னடா தம்பி பண்ற?” “ சூப்பர்ரா தம்பி.. நல்லா பண்றா” என உதவியாளர்கள் எங்களையெல்லாம் தன் உடன்பிறந்தத் தம்பிகளாகவேப் பார்த்தவர்.
சில மாதங்களுக்கு முன்பு “ சிவா.. TEASER CUT பண்ணிருக்கேன்.. 2 SONGS READYஆ இருக்கு.. வந்து பார்ரா” என ஃபோனில் பணிக்க, அங்கு சென்ற எனக்கு இருந்த ஒரே ஆச்சரியம் தலை கீழாக மாறியிருந்த அவரின் அணுகுமுறைதான்.
அவர் சொல்லி நாங்கள் FRAMEக்குள் செய்த ஒவ்வொரு வேலைகளையும், அது நல்லாருக்காடா? இது நல்லாருக்காடா??? என சிறு குழந்தை போல் கேட்டுக்கொண்டு, “ SUPERஆ இருக்கு SIR” என சொல்லும் பதிலைக் கேட்டு, அவர் பட்ட சந்தோசத்தைப் பார்க்கும் போது புரிந்தது ஒன்றுதான், ஒரு கலைஞன் தலைப் பிரசவத்தில் ஈன்றெடுத்த குழந்தையை தன் குடும்பத்தாரிடம் காட்ட எவ்வளவு துடித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பதுதான்.
SIR,
நான் உங்களிடம் முரண் பட்டிருக்கிறேன்.. கோவம் காட்டியிருக்கிறேன்.. நீங்கள் அழைத்தபோது வர மறுத்து வேறு படங்களுக்கு வேலை பார்க்க சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே சகித்த நீங்கள், இப்போது இப்படி ஒரு தண்டனையைத் தருவீர்கள் என எந்நிலையிலும் நினைத்ததில்லை.
கருடன், 4 BACHERLORS, 4G, தேவதை என உங்களின் அத்தனை கனவுகளும் காகிதங்களுக்குள்ளேயே கசங்கிப் போகுமென கனவு கூட காணவில்லை.
உங்கள் ஒரு “வீட்டுக்கணக்கு” போதும் நீங்கள் யாரென சொல்ல…
இன்று அவருக்காய் இத்திரையுலகம் செலுத்திய அஞ்சலிகளும், RIPகளும் மட்டும் போதாது..
4G அவரின் கனவு.. இவ்வுலகத்தில் அவர் உயிர் போன பின்பும் மிஞ்சியிருக்கும் அவர் உழைப்பு.. அதைத் திரைக்குக் கொண்டுவர இந்த 4 ஆண்டுகள் அவர் பட்ட வேதனைகளும், அனுபவித்த மன உளைச்சல்களும் கொஞ்ச நஞ்சமல்ல.. அதைத் திரைக்குக் கொண்டு வருவது மட்டுமே, சினிமாவை உன்னதமாக நேசித்த அந்த கலைஞனின் மரணத்துக்கு செய்யும் ஒரே மரியாதை….
முதல் முறை நான் உங்கள் உதவி இயக்குனராய் உங்களைப் பார்க்க சரியாக நீங்கள் சொன்ன 9 மணிக்கு வந்த போது, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,
“ FIRST DAY, CORRECT TIMEக்கு வந்துட்டியேடா தம்பி” என சிரித்தீர்கள். இன்று, மதுரையில் இருந்து என்னால் முடிந்த மட்டும் முயற்சி செய்து ஓடி வந்து, அந்த மின் மயானத்திற்குள் நுழைய, “ இப்பதான் 2 SECOND ஆகுது CLOSE பண்ணி” என கேட்ட போது, எனக்குள் தோன்றிய ஒரே வார்த்தை ,
“ SORRY SIR… LAST DAY…….. LATE ஆக்கிட்டேன் ”..
போய்ட்டு வாங்க Sir… உங்க கனவுக்கும் சேத்து நாங்க களமாடுறோம்…
முகநூலில் Siva Murugesan