அணுக்கழிவுகளை முழுதாக செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் இல்லாத நிலையில், அதை தமிழ்நாட்டில் ‘பாதுகாப்பாக’ சேமித்து வைக்கப் போகறோம் என்று… தமிழர்கள் மீது மத்திய அரசு தொடுக்கும் சூழலியல் போர். மாநில அரசு சொந்தத் தமிழின மக்களுக்குச் செய்யும் துரோகம்.

அணுக்கழிவு மையம் அமைக்க, இந்தியாவில் கூடங்குளத்தையே தேர்வு செய்ய ஜூலை 10 ல் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது!!! அணுஉலையே ஆபத்து எனும்போது அணுக்கழிவு மையம் அதனினும் பெரும் ஆபத்து.

அணுக்கழிவு மையம் என்றால் என்ன ? அணு உலை மின்சாரம், நிலக்கரி வைத்து எடுக்கப்படும் அனல் மின்சாரம் போல இல்லாமல் கடுமையான கதிர்வீச்சுடைய தனிமங்களை கழிவாக வெளிவிடக்கூடியது. நிலக்கரி சாம்பல் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு. ஆனாலும் கூட அணுக்கதிர் வீச்சு போல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அங்கு உயிர்வாழும் எல்லா உயிரினங்களையும் அழிக்க வல்லதல்ல. அணு உலையில் அவ்வாற மிச்சமாகும் அணுக்கதிர்வீச்சு கழிவுகளை பாதுகாப்பதே பெரும ஆபத்தான காரியமாகும். அத்தைகைய கழிவுகளை பாதுகாக்கும் மையம் தான் அணுக்கழிவு மையம் எனப்படும். அத்தகைய மையம் தான் கூடங்குளத்தில் அமையவிருக்கிறது.

நம் எதிர்காலத் தலைமுறைக்கு பேராபத்தைக் கொண்டுவரும் திட்டம் என்பதால்தான் கர்நாடகத்தில் கோலாரில் பயன்பாட்டில் இல்லாத, பழைய தங்கச்சுரங்கங்களில் அமைக்க, கர்நாடக அரசு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. கன்னடர்கள் தப்பித்தார்கள்.

தமிழக மக்களுக்கும், இந்த மண்ணிற்கும் பெரும் தீங்காக அமைந்திருக்கிற கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக இங்கு பலரும் போராடிக்கொண்டிருக்கிற நிலையில்.. போராடுபவரகளை தேசத் துரோகிகள் என்று உள்ளே தள்ளுகிறது அரசு.

இந்த சூழலில் மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை ஆபத்தான அதே கூடங்குளம் அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரம் கிலோ எடையுள்ள கழிவுகள் வெளியாகிறது. கூடங்குளத்தில் ஏற்கனவே ஆயிரம் மெகாவாட் உலைகள் இரண்டு செயல்பட்டு வருகின்றன. இது போக இன்னும் இரு அணுஉலைகளை கட்டி வருகிறது அரசு. இது போக ரஷ்யாவின் தயாரிப்பான ஏழு அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணுகுண்டுக்குச் சமம். அது போக அணு உலை வெளிவிடும் அணுக்கதிர்க் கழிவுகள் வேறு.

இவ்வாறு வெளியாகும் அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. அவற்றினை 7 வருடங்களுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும்.

அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி புதிதாக அமைக்கப்படவுள்ள தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor -AFR) கொண்டுச் செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் என்பது ஏறத்தாழ 48 ஆயிரம் ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை.

இக்காலக்கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழகமே மிகப்பெரியப் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இந் நிலத்தில் உயிர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். ஜப்பானில் ஹீரோஷீமா, நாகாசாகியில் அணுகுண்டு வெடித்து 100 வருடங்களான பின் அங்கே இன்னும் குழந்தைகள் பிறக்கும்போதே ஊனமாகவும், ரத்தப் புற்றுநோய் போன்ற வியாதிகள் கொண்டவர்களாகவும் பிறந்து வருகிறார்கள். கூடங்களுத்தில் அமையப் போகும் இந்த அணுக்கழிவு மையங்களோ அது போல பல நூறு அணுகுண்டுகளை உருவாக்கக்கூடியவை.

போர் என்று வந்து ஒரு விமானம் இந்த உலைகளின் மீது ஒரு சாதாரண குண்டை இந்த அணுஉலைகளின் மீது போட்டால் போதும். இந்த அணுஉலைகளே அணுகுண்டுகளாய் வெடித்துச் சிதறும். மொத்த தமிழ்நாடே சுடுகாடாய் மாறும். ஜப்பானின் புகுஷிமா அணுஉலை கடலுக்குள் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்துல்கலாம் அவர்களின் பெயரால், பனியா மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றியும், அணுஉலையை எதிர்க்கும் போராட்டங்களை தந்திரமாக கைவிடவும் செய்த, அபாயகரமான இந்த கூடங்குளம் அணு உலையையே மொத்தமாக இழுத்து மூடுவோம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இந்த அணுக்கழிவால் அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால்
சாகப் போவது தமிழர்கள் மட்டுமல்ல இங்கே வாழும்
மலையாளிகள் , கன்னடர்கள் , தெலுங்கர்கள் , மார்வாரிகள்
குஜராத்திகள் , பீகாரிகள், விலங்குகள், பூச்சிகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து மனித இனமே தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வரும்…

வடநாட்டில் தங்கள் மாநிலங்களில் தங்கள் மாநிலத்துக்கே ஆபத்து என்று உணர்ந்து, எந்த அரசும் வைத்துக் கொள்ள முன்வராத இந்த அணுஉலையை தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் வைத்துக்கொள்ள மத்திய அரசு முன்னேற்றம் என்ற பெயரில் நம் தலையில் கட்டிவிட்டது. இனி ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, போர் கருவிகள் உற்பத்தி, அணுகுண்டு உற்பத்தி எனத் தமிழ்நாடே அழிவுப் பொருட்கள் உற்பத்தி மையமாக எதிர்காலத்தில் மாற்றப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

எனவே, இச் செய்தியை அனைவருக்கும் முடிந்தவரை பிறருக்கு பகிர்ந்து அணு ஆபத்திலிருந்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்வோம். நம் எதிர்கால சந்ததிகளை காப்போம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.