ஈழத் தமிழரின் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது.
அதற்குப் பின் அங்கே அரசியல் ரீதியாக மீதமிருக்கும் தமிழ்த் தலைவர்களை சந்தர்ப்பவாதம் மற்றும் குழுவாதத்திற்குள் விழவைத்து வெற்றிபெறுவது சிங்களருக்கு சாத்தியமாகி விட்டது.
ஜூலை மாதம் நடந்த தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் 4 இடங்களில் சிங்களர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி எல்லா தமிழரும் அவருக்கு மட்டுமே வாக்களித்திருந்தால் அந்த தமிழர் ஒற்றுமை சிங்களரை அச்சுறுத்தி இருக்கும். தமிழர் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு பேராடும் வழி உருவாகி இருக்கும்.
ஈழப் போராட்டத்தில் தமிழர் தொடர்ந்து அடைந்து வரும் தோல்விகள் பற்றி ஆராய்கிறார் வரலாற்று ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள்.