இந்த ஃபேஸ்புக் நம்மை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு தெரியுமா?

வீட்டுக்கு வந்த மாமனாரை வாங்க சகோ
என்று சொல்லும் அளவுக்கு

மனைவி சாப்பாடு போடும்போது
போதும் தோழி என்று சொல்லும்
அளவுக்கு

பையனை பார்த்து கொஞ்சம் தண்ணீ
எடுத்து வா மச்சி என்று சொல்லும்
அளவுக்கு

போன் பண்ணும் அம்மாவிடம் நன்றாக
சாப்பிடுங்க சகோதரி என்று சொல்லும் அளவுக்கு

அலுவலகத்தில் மீட்டிங் அரேஞ்ச் பண்ணு
என்னும் சொல்லும் மேனேஜரிடம்
கெத்து ப்ரோ என்று சொல்லும் அளவுக்கு

பக்கத்து வீட்டு லேடி நம் வீட்டிற்கு
காபிதூள் வாங்க வரும் போது ஆசம் தோழி என்று சொல்லும் அளவுக்கு

அடம் பிடிக்கும் குழந்தையிடம் தமிழனாய் இருந்தால் கம்முனு இரு என்று சொல்லும் அளவுக்கு

மாமியார் வீட்டுக்கு வந்தால்
go back mamiyar என்று சொல்லும்
அளவுக்கு

அக்கம் பக்கம் பெண்களை பார்த்தால் ,
செய்து வைத்த செப்பு சிலை போல உள்ளீர்கள் என்று சொல்லும் அளவுக்கு

ரோட்டில கணவனை அடிக்கும்
மனைவியை பார்த்து பெண்ணியம் வாழ்க என்று சொல்லும் அளவுக்கு

ஞாயித்து கிழமை நண்பனுக்கு போன்
பண்ணி எங்கூட்ல கறி கொழம்பு என்று பெருமை கூறி
செல்ஃபீ போடும் அளவுக்கு.

நியூஸ் பேப்பர் ல ஏதாவது நல்ல செய்தி படிச்சிட்டு கீழே ஆர்டீன் தேடும் அளவுக்கு

அடுத்து வேளை என்ன சமைக்கலாம் என்பது மாறி போயி
அடுத்த பதிவு என்ன போடலாம் ன்னு யோசிக்கிற அளவுக்கு

சீரியலில் அழும் பெண்ணை பார்த்து ஆணாக பிறந்ததற்கே வேதனை படுகிறேன் என்று புலம்பும் அளவுக்கு

நானும் ஏதாவது சொல்றேன்னு அட்டென்ஷன் சீக்கிங்ல போடற தோழிக்கு செப்பல் ஷாட் பதிவு தோழி னு சொல்ற அளவுக்கு…

முகநூலில்…ஸ்ரீநிவாசன் நிதீஷ்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.