தொடர்ந்து ரீமேக் படங்களை மட்டுமே எடுத்து, ஒரிஜினல் படங்களின் ரிசல்டில் பாதியைக் கூட தர இயலாத ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”.

இப்படம், உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதாவது……

ஜெயங்கொண்டானில் ஆரம்பித்த பயணம் 10 படங்கள் வரை வந்துள்ளது. அதற்கு முழுக்காரணம் தியாகராஜன் சார் தான். இந்தப்படத்தில் எனக்கு, கண்டேன் காதலை படத்துக்காக எப்படி ஒரு பாராட்டு கிடைத்ததோ அதே போல் இப்படத்தில் கிடைக்கும் என நம்புகிறேன். அதர்வா தான் இந்தப்படத்தை முதலில் என்னிடம் அறிமுகம் செய்தார். பின் முறையாக அனுமதி வாங்கி செய்துள்ளோம். இந்தப்படம் எந்த இடத்திலும் ஒரு முகச்சுளிப்பு இல்லாமல், பார்க்க முடிகிற படமாக இருக்கும். இந்தபடத்திற்கு ராம் பிரசாத் மிக ஆதரவாக இருந்தார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு இந்தப்படம் உருவாக மிகமிக உதவி செய்துள்ளார். கபிலன் வைரமுத்துவுடன் தள்ளிப்போகாதேவுக்குப் பிறகு தொடர்ந்து பயணித்து வருகிறேன். மிக அற்புதமான எழுத்தாளர். அமிதாஷ் மிக அற்புதமாகச் செய்துள்ளார் அவர் சரியாகச் செயதால் தான் இந்தப்படம் எடுபடும், அதை உணர்ந்து செய்துள்ளார். இந்தப்படம் நன்றாக வர மிக முக்கிய காரணம் அதர்வா மற்றும் அனுபமா தான். இருவரும் போட்டி போட்டு செய்துள்ளார்கள். தள்ளிப்போகாதே வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் அழுத்தமான பதிப்பாக இருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசியதாவது…….

தள்ளிப்போகாதே டிரெய்லர் அற்புதமாக இருந்தது. நல்ல காதல் திரைப்படம் என்பது திரையில் தெரிகிறது. ஒளிப்பதிவு அபாரமாக இருந்தது. அதர்வாவை சின்ன வயசிலேயே தெரியும். அவர் அப்பா எங்கள் நிறுவனத்தில் படம் செய்ததிலிருந்தே தெரியும். முரளியும் நானும் நண்பர்களாகவே பழகினோம். அதர்வாவை எங்கள் நிறுவனத்தில் பாணா காத்தாடியில் அறிமுகம் செய்தோம். அந்தப் படத்திலேயே அவர் நன்றாகச் செய்திருந்தார். இந்தப்படத்தில் நிறைய முன்னேறி விட்டார். அனுபமா, அமிதாஷ் இருவரும் நன்றாகச் செய்துள்ளார்கள். படத்தை பார்த்து விரும்பி விநியோகஸ்தர் வெளியிடுவது மனதிற்கு மகிழ்ச்சி. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். மணிரத்னம் எப்படி முதல்பட கதை சொன்னார் என ஜெகன் கேட்டதற்கு பதில் சொல்லிவிடுகிறேன். நானும் மணிரத்னமும் மிக நெருங்கிய நண்பர்கள் அவரும் நானும் நிறைய கதை பேசுவோம். மணியின் கன்னடப் படமான பல்லவி அனு பல்லவி பார்த்து பிரமித்தேன். அவர் அப்போது என்னிடம் கதை இருக்கிறது படம் செய்யலாம் என்று சொன்னவுடன் செய்யலாம் என்று செய்தேன், அப்படித்தான் பகல்நிலவு உருவானது. எங்கள் நிறுவனம் சீரியல் செய்த போது கண்ணன் எங்களுடன் வேலை செய்தார். அவர் மணிரத்னத்துடன் வேலை செய்துவிட்டு வந்தபோது, மணிரத்னம் அவரைப் பற்றி பெருமையாகச் சொன்னார். அவரிடம் மிகப்பெரிய திறமை இருக்கிறது. அதர்வாவிற்கு இதயம் மாதிரி இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது……

2 வருசம் கழிச்சு எனக்கு நடக்கும் முதல் ப்ரஸ் மீட் இது, இந்த 2 வருடத்தில் நிறைய விசயங்களைக் கடந்து வந்துள்ளோம். இப்போது எல்லோரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நானும் கண்ணன் சாரும் ஒரு காதல் படம் செய்யலாம் எனப் பேசியபோது, இந்தப்டம் எங்கள் பேச்சில் வந்தது. அந்தக்கதையை தமிழுக்கு மாற்ற, கபிலனைத் தவிர வேறு யாருமே எங்கள் மனதில் வரவில்லை. நாங்கள் நினைத்தது போல் தமிழில் மிக அழகாக மாற்றித் தந்தார். அவருக்கு நன்றி. இந்தப் படத்திற்கு எங்கள் முதல் சாய்ஸாக அனுபமா தான் இருந்தார். அமிதாஷ் பாத்திரத்திற்கு நிறையப் பேரைப் பார்த்தோம் கடைசியாக தான் அவர் வந்தார். அற்புதமாகச் செய்துள்ளார். கண்ணன் வேலை செய்யும் வேகம் பற்றி நிறையப் பேர் சொல்லி விட்டார்கள். இந்தபடத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்கு தாடி வளர்க்க வேண்டும் நான் தாடி வளர்த்த மூன்று வாரங்களில் ஒரு படத்தையே முடித்து விட்டு வந்துவிட்டார். அவ்வளவு வேகமாக வேலை செய்யக்கூடியவர். அனுபமா அற்புதமான நடிகை, இதில் அவரை எல்லாருக்கும் பிடிக்கும். தியாகராஜன் சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் இங்கு வந்து என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். இயக்குநர் ஆர்.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.கே.ஆர்.பி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.. மேஜிக் ரேஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.