அவார் : உங்க கோவில் பக்கம் வந்தேன். பரவாயில்லை நல்லா கொடை நடத்துறீங்க.

இவர் : அப்படியா ? நல்லதுங்க

அவார் :எல்லாமே நல்லா இருக்கு. ஆனா இந்த பச்சைமிளகாயை அரைச்சி முகம் வழியே
பலர் விட்டுக்குறீங்களே அது என்ன சடங்கு. எனக்கு பிடிக்கவே இல்ல.

இவர் : அப்படி சொல்லாதீங்க. எங்களுக்கு அதுதான் தெய்வம். எங்க ஊர் பக்கம் பச்சமிளகாய் மட்டும்தான் விளையும். அதுதான் எங்க தெய்வம். எங்க சாமி பேரே ”மிளகாய் காத்தான்” தான்.

அவார் :”மிளகாய் காத்தான்” இப்படி ஒரு சாமி இருக்கா என்ன? இது பெருமாளா ?

இவர் : இல்ல

அவார்: அப்ப சிவனா?

இவர்: இல்ல

அவார் : அப்ப பிரம்மாவா

இவர் : இல்ல

அவார் : விஷ்ணுவும் இல்ல, சிவனும் இல்ல, பிரம்மாவும் இல்ல. அப்ப யார்தான் அது

இவர் : அதான் தெளிவா சொல்லிட்டேன்ல அந்த சாமி பேரே “மிளகாய் காத்தான்” தான்.

அவார்: ஆனா பார்க்க பெருமாளாட்டம்தான் இருக்கார்.

இவர் : இல்லையே அவரு பாக்க “மிளகாய் காத்தான்” மாதிரிதான் இருக்கார்.

அவார் : ஒக்கே ஒக்கே. ஆனா என்ன பண்ணுங்கோ. சிம்பிளா பக்கத்துல சின்னதா ஒரு பெருமாள் வெச்சி கும்பிடுங்கோ. நா ஹெல்ப் பண்றேன்.

இவர் : வேண்டாங்க. இப்படித்தான் பக்கத்து ஊர்ல பேச்சியம்மன் கோவில்ல, பேச்சியம்மனுக்கு கொடைக்கு வருசம் நாலு கெடா வெட்டி நல்லா சாப்பிட்டுட்டு இருந்தாங்க. உங்கள மாதிரி ஒருத்தர் பகக்த்துல பெருமாள் வைங்கன்னு சொன்னாரு. நம்பி வெச்சானுங்க. கொஞ்சம்கொஞ்சமா பெருமாள் பெருமாளுன்னு உங்கள மாதிரி நிறைய ஆட்கள் வந்து தெரியாத பாஷையில மந்திரம் சொன்னானுங்க. அப்புறம் பெருமாள் இருக்கிற இடத்துல கெடா வெட்டக் கூடாதுன்னு சொன்னானுங்க. அப்ப பாத்து ஊருக்குள்ள சிக்கன்குனியா வந்துச்சு. பாருங்கோ பெருமாளுக்கே பொறுக்கலன்னு சொன்னாங்க. உடனே கெடா வெட்ட நிறுத்திப்புட்டானுங்க. இப்ப சக்கரைப்பொங்கல இலைல வெச்சி தின்கானுங்க. சக்கரை பொங்கல் திங்குறதுக்கா கோவில் கொடை கொண்டாடுறோம்.

அவார்: சரி அத விடுங்கோ இந்த மிளகாய் காத்த பெருமாள் இருக்காரில்லையா

இவர் : ஹலோ ஹல்லல்லோ. என்னா சைடு கேப்ல எங்க மிளகாய் காத்தான் சாமிய மிளகாய் காத்த பெருமாள்ன்னு மாத்துறீங்க. இந்த டிகால்டி வேலையெல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.

அவார் : இல்லங்க இப்பதான் நினைவு வருது. நம்ம மதத்துல “ஜலப்புராணம்” ன்னு ஒண்ணு இருக்கு.

இவர் : அப்படியா சொல்லவே இல்ல.

அவார் : ஹாங் இருக்கு.. ஜலப்புராணத்துல பெருமாள் மிளகாயையும் காப்பார்ன்னு ஒரு கத இருக்கு. எனக்கு இப்பதான் நினைவு இருக்கு.

இவர்: அந்த புராணம் பழமையானதா

அவார்: ஆமா ஆமா

இவர் : இப்ப திடீருன்னு ஜலப்புராணத்துல மிளகாய் காத்த பெருமாள் இருக்கிறது நினைவுக்கு வந்துச்சாக்கும்.

அவார் : ஜலப்புராணம் நாலாயிரம் வருசமா இருக்கு. எனக்கு இப்பத்தான் நினைவுக்கு வந்துச்சு.

இவர் : பச்சை மிளகாய் இந்தியாவுக்கு வந்ததே 15 ஆம் நூற்றாண்டுதான். நாங்க மிளகாய் காத்தான்ன்னு ஒரு சாமியை உருவாக்கினதே 150 வருசத்துக்கு முன்னாடிதான். பிறகு ஏய்யா பெருமாளுக்கும் எங்க மிளகாய் காத்தானுக்கும் கனெக்‌ஷன் போட்டு கத சொல்ற.

அவார் : அது வந்து

இவர் : போதும் உங்க தந்திரம் புரியுது. இனிமேலும் எங்கள ஏமாத்த முடியாது. எங்க வழிபாட்டு முறையில யாரையும் உள்ள விட மாட்டோம். இருங்க எங்க வழிபாட்டு முறையில உங்க முகத்துல அரைச்ச மிளகாயை கரைச்சி ஊத்துறேன்.

அவார் : அட இதென்ன வந்தது. ஏன் கோபம்ங்கிறேன். நீங்க “மிளகாய் காத்தான்” சாமிய நல்லா கும்பிடுங்கோ.

இவர் : நீங்க கிறிஸ்தவங்கள மதம் மாத்துறாங்க, மதம் மாத்துறாங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க இந்த “கனெக்சன்” முறையில எத்தன வழிபாட்ட உங்க சமஸ்கிருத ஆரிய மதத்துக்கு மாத்துனீங்கன்னு யோசிங்க. உங்களுக்கு அவுங்க மேலே கோபம் வராது.

அவார்: எனக்கு காது கேக்கல. காது கேக்கல. காதே கேக்கல.

இவர் : உண்மையைச் சொன்னா உங்களுக்கு காது கேக்காதுதான். ஆனா உண்மையை பேச எனக்கு வாயிருக்கு. அறிவு இருக்கு புரிஞ்சிகோங்க. எங்கள
நீங்க ஏமாத்தினது எல்லாம் ஒரு காலத்துல சரியா. இப்ப கிளம்புங்க. காத்துவரட்டும்.

–முகநூலில் விஜயபாஸ்கர்

https://www.facebook.com/2014967758783988/posts/2078481502432613/

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.