லோகி வெப்சீரிஸ், ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து மல்டிவெர்ஸ் கான்செப்ட்டை கசக்கி பிழிந்து விட்ட நிலையில், இந்த படத்திலும் லேடி டெட்பூல் முதல் நாய்க்குட்டி டெட்பூல், புட்டி பால் டெட்பூல் என ஏகப்பட்ட வேரியண்ட்ஸ் வந்துக் கொண்டே இருக்கின்றன. இயக்குநர் ஷான் லெவி அந்த கொண்டாட்டத்தை எந்தளவுக்கு தியேட்டரில் படமாக கொண்டு வந்திருக்கிறார் என்பது கேள்வி.
ஏ சான்றிதழ் படமாக இந்த படத்தை கொடுத்திருப்பதே இளைஞர்களுக்கு செம எண்டர்டெயின்மென்ட் தான். டெட்பூல் படங்களில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு ஏகப்பட்ட ஆபாச வசனங்கள் படம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. தயவு செய்து சூப்பர் ஹீரோ படம் என உங்கள் குழந்தைகளை எல்லாம் படத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டாம். தமிழ் டப்பிங்கிலும் சென்சார் கை வைக்காமல் அப்படியே வெளியிட்டுள்ளனர்.
டெட்பூல் அண்ட் வோல்வரின் கதை: தன்னுடைய உலகம் அழிவதை கூட கண்டுக்கொள்ளாத டெட்பூல் தனக்குப் பிடித்த நவகிரக நண்பர்கள் சேர்ந்து அழிவதை தடுக்க நினைக்கிறார். மார்வெலின் ஆண்டவரே நான் தான் என நினைத்துக் கொண்டு சுற்றும் டெட்பூலுக்கு ஒரு கட்டத்தில் வோல்வரின் தான் ரியல் காப்பான் என தெரிய வர, செத்துக் கிடக்கும் ஸ்டீல் எலும்புக் கூடு வோல்வரினில் இருந்து பல்வேறு வோல்வரின் வேரியண்ட்டுகளை தேடி அலைந்து ஒன்றுக்கும் உதவாத குடிகார வோல்வரினை கண்டுபிடிக்கிறார். மஞ்சள் நிற சூப்பர் ஹீரோ சூட்டில் செம மாஸாக வரும் வோல்வரின் டெட்பூலின் லட்சியத்திற்கு உதவினாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
டபுள் மீனிங் காமெடி எல்லாம் இல்லைங்க, டோட்டலாவே ஸ்ட்ரெயிட் மீனிங் காமெடி காட்சிகள் தான். டெட்பூலின் வாயை திறந்தாலே காதுகளில் தேன் வந்து பாய்கிறது என்பது போல முக்கிய உறுப்பை வைத்து அடித்துள்ள ஏ ஜோக்ஸ் டெட்பூல் வேரியண்டுகளுடன் அதிகமாகவே படத்தில் நிரம்பி வழிகிறது. ஆனால், அதே சமயம் ஒவ்வொரு ஜோக்கிற்கும் தியேட்டரே விழுந்து சிரிக்கும் அளவுக்கு அதை புத்திசாலித்தனமாக கையாண்டு இருக்கும் விதமும் தமிழ் டப்பிங் டீமுக்கும் தனி அப்ளாஸை கொடுத்து விடலாம். அடுத்து மார்வெல் ஆபாசக் காட்சிகளை வைக்காமல் இருந்தால் சரி.
ஏகப்பட்ட ஸ்பெஷல் கேமியோக்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அளவுக்கு இந்த படத்தில் உள்ளன. ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் ஸ்பாய்லர் அலர்ட் பண்ணிடாதீங்க என கேட்டுக் கொண்ட நிலையில், டெட்பூல் போல தயாரிப்பு நிறுவனத்தை ஓட்டும் விதமாக ஸ்பாய்லர் அலர்ட் செய்து விடலாமா என்றும் தோன்றுகிறது. நாளைக்கு படம் வெளியானவுடனே சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் அதை தாராளமாக செய்து விடுவார்கள் என்பதால், முடிந்தவரை சீக்கிரமாக தியேட்டருக்குப் போய் படத்தை பார்த்துவிடுங்க, அதுவரை சோஷியல் மீடியா பக்கமே போக வேண்டாம்.
ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹியூ ஜேக்மனின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் கச்சிதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள், செட் வொர்க், பிஜிஎம், சிஜி வொர்க் என அனைத்துமே டாப் நாட்ச் லெவல் என்றே சொல்லலாம். குறிப்பாக படத்தின் ஹைலைட்டே காமெடி டயலாக்குகள் தான். ரியான் ரெனால்ட்ஸ் பெயரும் ரைட்டர் பெயரில் இடம்பெற்றிருப்பதால், மார்வெல், டிசி, 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் என விஜய் டிவி சம்பளம் கொடுக்கல என செல்ஃப் ட்ரோல் செய்வது போல இங்கேயும் செல்ஃப் ட்ரோல் காமெடிகள் நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. அந்த குக் வித் கோமாளி காமெடியும் ரகளை தான்.
டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தில் மைனஸ் என்றால் வெயிட்டான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பது தான் ரொம்பவே வருத்தத்தை கொடுக்கிறது. மூளைக்குள் கை விட்டு குடாய்ந்து என்ன நினைக்கிறோம். எதற்காக வந்திருக்கிறோம் என்பதை எல்லாம் கண்டு பிடிக்கும் அந்த வில்லன் கதாபாத்திரம் நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? என்றே புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு செய்யும் செயல்கள் கிளைமேக்ஸில் லேசாக இல்லை பயங்கர குழப்பமாகவே உள்ளது. இதற்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே என்று தான் எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் இந்த டெட்பூல் அண்ட் வோல்வரின் மார்வெல் ரசிகர்களுக்கு ஒரு தியேட்டர் கொண்டாட்டம் படம் தான்.