Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில்,
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.

படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசியதாவது…
தமிழில் நான் செய்த முதல் படம் கௌதம் சாரின் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்போது பணி மூலம் மீண்டும் வருவது மகிழ்ச்சி. ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் மிகப்பெரும் நடிகர். அவரது இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். தமிழில் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை அபயா ஹிரன்மயா பேசியதாவது…
பணி படம் முழுதும் ஜோஜு ஜார்ஜ் தான். இது அவரது படைப்பு. கேரளாவில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இங்கும் நல்ல வரவேற்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஜுனைஸ் பேசியதாவது…
பணி என் முதல் படம். இப்படம் கேரளாவில் 5 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் நல்ல வரவேற்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் எனக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஜாகர் சூர்யா பேசியதாவது…
பணி படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் நடித்தது நல்ல அனுபவம். தமிழில் எங்கள் படம் வெளியாவது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை அபிநயா பேசியதாவது…
இது ஜோஜு ஜார்ஜ் சாரின் முதல் படம். என்னை இந்த கேரக்டருக்கு தேர்ந்தெடுத்ததற்கு ஜோஜு சாருக்கு நன்றி. அவரின் பெரிய ஃபேன் நான். இந்தப்படத்தில் மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார். அவர் மிகச்சிறந்த இயக்குரும் கூட. இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படம் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசியதாவது…
என் தமிழ் நன்றாக இருக்காது மன்னிக்கவும், வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என நம்பி வந்திருக்கிறேன். எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஊக்குவித்து இங்கு ரிலீஸ் செய்ய சொன்னதால் தான் ரிலீஸ் செய்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப்படத்திற்காக 2 வருடம் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து, இந்தப்படம் செய்தேன். இப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். இங்கு மணிரத்னம் சார், கமல் சார், விக்ரம் சார் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள். சந்தோஷ் நாராயணன் எனக்காக ஸ்பெஷல் பாடல் தந்தார். அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இந்தப்படத்தை தமிழில் நாங்கள் பெரிய அளவில், விளம்பரம் செய்யவில்லை. நீங்கள் தான் ஆதரவு தந்து, இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் நன்றி என்றார்.

Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios சார்பில், தயாரிப்பாளர்கள் M ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

தமிழகமெங்கும் பணி படம் கோகுலம் மூவிஸ் வெளியீட்டில், வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.