நம்மை பொறுத்தவரை நடிகர் ரஜினி மராட்டியர், கன்னடர் அப்படி என்ற கண்ணோட்டம் கிடையாது..
இதுவரையிலான அவருடைய அரசியல் பேச்சுக்கள். செயல்பாடுகள் போன்றவற்றை அந்தந்த கால கட்டங்களை பொருத்தி பார்க்கும்போது, எள்ளளவு நேர்மையை விட வியாபாரம், தப்பித்தல் போன்ற வற்றை செய்வதில் உள்ள தந்திரம்தான் அதிகம் வெளிப்படுகிறது..
இரண்டு படங்களும் ஓடி முடிகிறவரை பரபரப்பாக செயல்படுவார் என்பது நமது கணிப்பு.. அதனால்தான் அந்த தந்திர யுக்திகளை கடுமையாக விமர்சிக்கி றோம்.. தந்திரம் தொடரும் ஒவ்வொரு கட்டத்திலும் நாமும் விமர்சித்துக்கொண்டே இருப்போம். இன்னும் தீவிரமாய்…
வீடு எரியதுன்னா ஓடிவந்து தண்ணி ஊத்தணும்..
ஸ்பாட்ல நின்னு அட்லீஸ்ட் அங்க இருக்கறவங்களுக்கு கூடமாட ஒத்தாசையாவது செய்யணும்..
அதைவிட்டுட்டு நான் நாளைக்கு பத்து பயர் சர்வீஸ் வண்டியோட வருவேன்னு வியாக்கியானம் பேசி கிட்டு எஸ்கேப் ஆவக்கூடாதுன்னுதான் சொல்றோம்.
முகநூலில்; ஏழுமலை வெங்கடேசன் Ezhumalai Venkatesan