‘உலகம் வெறும் இருட்டு ,அதில் உருப்படியா ஏத்திக்கோடா விளக்கு’ என்று தனக்குத்தானே முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகிறது சன் டிவியின் முன்னாள் செயல் அதிகாரி ஹன்ராஜ் சாக்ஷேனா.
’தமிழ்நாட்டை விட்டே எஸ்கேப் ஆகி வெளிநாட்டில் வி.சி.டி. விக்கப்போறார்’. ’இல்லை ‘ஜெயா டி.விக்கு வேலைக்குப்போறார்’. ’இல்லையில்லை, அவர் சன் டி.வியோட ஆளுதான். சும்மா சண்டை மாதிரி ஆக்ட் பண்றாங்க.’’
இவரைப்பற்றி நடமாடும் இதுபோன்ற பதின்மூன்று வகையான வதந்திகளை மேலும் குழப்பும் வகையில், சில தினங்களுக்கு முன் நடந்த, இவரது வெளியீடான ‘சாருலதா’ ஆடியோ வெளியீட்டுவிழாவில், தானே ஒரு புதிய சேனல் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் சாக்ஸ்.
அந்த சானலில், நலிந்துகிடக்கும் சிறு தயாரிப்பாளர்களைக் காப்பதற்காக சிறிய பட்ஜெட் படங்களை வாங்குவதையே தனது முதல் லட்சியமாகக் கொண்டிருப்பதாக அறிவிக்கும் இதே சாக்ஸ், சன் டி.வி.யில் இருந்தபோது, சிறிய படத்தயாரிப்பாளர்களின் கொட்டையை எப்படி நசுக்கினார் என்பதை தமிழ்த்திரைப்பட உலகே நன்கறியும். இப்போ திருந்திட்டாராமா?
அடுத்து, தனது நண்பர்கள் மாறன்கள் பாணியில், அரசியலிலும் காலடி எடுத்துவைத்து, எதிர்காலத்தில் முதல்வர் பதவியைப்பிடிக்கும் எண்ணமும் சமீபத்தில் சாக்ஸுக்கு வந்திருக்கிறதாம்.
இதை ஒட்டி, தனது பேட்டி ஒன்றில், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவைத் தாறுமாறாகப் புகழும் சாக்ஸ், எனது தலையாய ஆதர்ஷம் முதல்வர் ஜெயல்லிதாதான் என்கிறார். அரசியலில் மிகப்பெரும் சக்திகளின் அச்சுறுத்தலை சந்தித்தபோதெல்லாம், அவர் அரசியலை விட்டே ஓடிவிடுவார் என்று பலரும் [தயாநிதியும், நீங்களுமா?] கணக்குப் போட்டனர். ஆனால் அவை அத்தனையையும் பொய்யாக்கி அவர், வீரத்தோடு மீண்டும் வென்று காட்டினார். இப்போது எனது வழியும் அதுதான். எவ்வளவு பெரிய அச்சுறுத்தல்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன். இனி என்ன நடந்தாலும், தமிழ்சினிமாவை விட்டு ஓடிவிடும் எண்ணம் ஒருபோதும் எனக்கு இல்லை’’ என்கிறார் சாக்ஸ்.
மாறன் பிரதர்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலை. மத்தபடி, தமிழ்சினிமா பார்ட்டிங்க யாரும் உங்கள ஓடவிடனும்னு நினைக்கலை. பழையமாதிரி நீங்க யாரையும் ஓட்டாம இருந்தா சரிதான் சாக்ஸ்.