70 வயதிலும் தன்னை இன்னும் இளைஞராகவே நினைத்துக்கொண்டிருக்கும் ரஜினி ‘துக்ளக்’பத்திரிகையின் 50 வது ஆண்டுவிழாவில் லேட்டஸ்டாக உளறிக்கொட்டியிருப்பது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘துக்ளக்’பத்திரிகையை கையில் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி என்று அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று அவர் பினாத்தியிருப்பது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பின்னர், பேசிய ரஜினி, மீடியாக்கள் தன் பேச்சை விஷமத்தனமாக திரித்து வெளியிடுவதாக புலம்பினார். அடுத்து பேசிய அவர்,’;
=முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி’என்றார்.

`கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக துக்ளக் இதழ் சோவின் மறைவுக்குப் பின்னர் சுமார் பத்தாயிரம் இதழ்கள் கூட விற்பனையாவதில்லை. அதிலும் ரஜினி துக்ளக் இதழை எப்போதுமே வாங்குவதில்லை என்கிற அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் இப்போதைக்கு பத்தாயிரம் அறிவாளிகள் கூட இல்லை.

Related Images: