வயது முப்பத்து மூன்றை நெருங்குகிறது. சினிமாவில் தேவைக்கும் அதிகமாகவே, அதாவது பதினோரு ஆண்டுகள் கதாநாயகியாகியாக, வலம் வந்தாகிவிட்டது. ஆனாலும் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே, சட்டசபையில், ஜெ’வை எதிர்த்து, நாக்கைத்துருத்தும் நம்ம கேபடன் மாதிரியே ஆகிவிடுகிறார் த்ரிஷா.
தெலுங்கு நடிகர் ராணாவுடன் சில வருடங்களாகவே, ஒரு மனைவிக்கும் அதிகமான நெருக்கம் காட்டும் த்ரிஷா, சமீபத்தில் அவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டு, பிளாட்டினம் மோதிரம் மாட்டிக்கொண்டதாக வந்த செய்திகளை வன்கொலை வெறியுடன் மறுக்கிறார்.
‘’ அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பிலிருந்தே எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் கோவா போவது, பார்ட்டிகளில் கலந்துகொள்வது போன்றவையெல்லாம் நட்பு ரீதியாக நடக்கும் விசயங்கள். இதைவைத்துக்கொண்டு நானும் அவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொல்வதெல்லாம் கற்பனை முடிச்சுகள்.
இப்படி நான் பார்ட்டிகளில் கலந்துகொண்டவர்களையெல்லாம் திருமணம் செய்வதாக இருந்தால், பல டஜன் மாப்பிள்ளைகள் சேர்ந்துவிடுவார்கள்.
உண்மையைச்சொல்வதானால் எனக்கு திருமண ஆசை என்ற ஒன்றே கிடையாது. இப்போது கூட கைவசம் நான்கு படங்களை வைத்துக்கொண்டு, எந்தப்படத்துக்கு முதலில் கால்ஷீட் தருவது என்று குழம்பும் அளவுக்கு பிஸியாக இருக்கிறேன். எனவே எனக்கு கண்டவர்களுடனெல்லாம் திருமணம் செய்துவைக்கும் வேலையை இனியாவது பத்திரிகையாளர்கள் நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ என்று ஆதங்கப்படுகிறார்
திவ்யா இல்லைன்னா த்ரிஷா’ன்னு அலைஞ்சாங்களே, அவங்க எதிர்காலத்துக்கு ஒரு முடிவு சொல்லிட்டு பிறகு நீங்க பேச்சிலரா இருக்குறத பத்தி முடிவு எடுங்க மேடம்.