சங்கிகளில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை சங்கிகளுக்கு, தாம் அளந்து விடுவது எல்லாம் பொய் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும், எல்லாம் தெரிந்தே, தன் வார்த்தை ஜாலங்களால், மொழிப் புலமையால், பொய்களை அடுக்குவார்கள், செய்திகளைத் திரிப்பார்கள். சங்கிகளின் உலகில் இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தான். ஆனால் இந்தச் சிறுபான்மை சங்கிகளின் சிப்பாய்கள்தான் பெரும்பான்மை சங்கிகள்.
சிறுபான்மை சங்கிகள் சமயத்துக்கு ஏற்ப எவருடனும், எந்த விஷயத்திலும் எல்லாவகையான சமரசங்களையும் செய்து கொண்டு செழிப்பாக இருப்பார்கள். பெரும்பான்மை சங்கிகளோ… இவர்களால்தான் தாம் கெட்டோம் என்பதுகூடத் தெரியாமல் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருப்பார்கள். முட்டாள்தனமாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் முட்டுக்கொடுத்தே இன்னும் முட்டாள் ஆவதை நமுட்டுச்சிரிப்போடு பார்த்து, மகிழ்ந்து, இன்னும் உசுப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள் சிறுபான்மை சங்கிகள்.
அந்தப் பெரும்பான்மை சங்கிகள் யார்? Arunachalam Senthilkumar விளக்குகிறார் :
சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுக வேண்டாம் .உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குரியவர். அவர் சுய சிந்தனையற்று , தனக்கு வரும் whatsapp & Facebook மெசேஜ்களை உண்மை என உளமார நம்பி பல குழுக்களில் பகிர்பவர்.
99% அவர் சுயமாக எழுத இயலாதவர் .
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப்பற்றிய சுய பெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது . அதனால் தன் ஜாதியின் மூலமாகவும் , மதத்தின் வழியாகவும் எப்படியாவது ஒரு பெருமித்த்தை அடையலாம் என நம்பும் ஒரு பரிதாபத்திற்குரியவர் .
சங்கி என்பவர் ஒரு புத்தகத்தை கூட முழுவதுமாக வாசித்து அறியாத அபலை. அவருடைய மொத்த தகவகலறிவும் அவரை இயக்கும் (உம். மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன்) போன்ற ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்பட்டது . அவருடைய அனைத்து கேள்விகளும் , பதில்களும் அவர்களிடமிருந்து இவரது மண்டைக்குள் copy & paste செய்யப்பட்டது .
சங்கிகளுக்குள் சுற்றும் அனைத்து கேள்விகளும், பதில்களும் அவர்களுக்குள்ளேயே “ஈயடிச்சான் காப்பி” போல ஓரே மாதிரியாகத்தான் இருக்கும்.
அதனால் தான் ஆயிரம் முறை தெளிவான பதில் கிடைத்த பின்னும் இன்னமும் ஈவெரா தன் கிழ வயதில் மகளைப்போன்ற மணியம்மையை திருமணம் செய்தது ஏன் ? என எங்கேனும் கேட்டுக்கொண்டிருப்பார் .
(பெரியாரை ஈவெரா என அழைப்பதன் மூலம் தானும் அரசியல் கருத்தியலில் ஒரு உச்சநிலைய அடைந்து விட்டதாக நம்புவர்)
உள்ளூர் கட்சி கிளை செயலாளரான சுப்புவைக் காண அவர் வீட்டிற்குப் போன போது, அங்கிருந்த சுப்புவின் அம்மாவிடம் , சுப்புஜீ இருக்காரா? என கேட்டு சிரிப்பை வரவழைத்தவர். ஜி என்றே இன்றும் எல்லோரையும் அழைக்க ஆசைப்படுபவர்.
என்னங்கஜி, வாங்கஜி, உட்காருங்கஜி, செமஜி, சொல்லுங்கஜி என அவன் தனக்கே உரிய பிரத்யோகமான ஜிதமிழில் பேசுபவர்.
போர்வெல் போடும் காட்டில் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டு தண்ணீர் மட்டம் பொத்துக்கொண்டு வராதா என ஏக்கத்துடன் பார்க்கும் விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவனை போல, கீழடி அகழ்வாராய்சி நடக்கும் போது தோண்டத் தோண்ட ஏதாவது ஒரு இந்துத்துவ சிலையோ, வேதப் புத்தகமோ கிடைக்காதா என நம்பி நம்பி வெம்பியவர் .
குஜராத்தை விட தமிழ்நாடு எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலம் என்ற உண்மை அவன் முகத்திலறைந்த போதும்
தமிழினமென்று பேசுபவர்களால் அழிந்தோம் என கூசாமல் பேசுபவர்.
தன் கைப்பட ஒரு அணுகுண்டை பாக்கெட்டில் வைத்து எடுத்து சென்று பாகிஸ்தான் மீது போட்டு அந்நாடு பஸ்பமாவதை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பது சங்கியின் ஆழ்மன அவா.
தெருமுக்கு கறிக்கடை பாயின் முன்னோர்கள் பாபரின் படையில் வீரர்களாக வந்து இங்கு செட்டிலானவர்கள் என்பது அவரது திண்ணமான எண்ணம் .
உலகப் பொருளாதாரம் , தொழில் நுட்பம் வான்வெளி ஆராய்சி, software , nano technology, micro biology இன்னும் சில பல துறைகளில் மோடி ஞானம் பெற்றவர் என்பது சங்கியின் அசைக்க முடியாத நம்பிக்கை .
இன்றைய lockdown சூழலில் கூட மோடி மைக்ராஸ்கோப் வழியாக கொரானா வைரஸை பார்த்து அதன் RNA-ல் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய அமைப்பைக் கண்டு விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்கூற அவர்கள் வியப்பின் உச்சியில் உறைந்த செய்திக்காக தினமும் தினமலருக்கு தவமிருப்பவர்.
தினமலர் கூறும் ‘இந்துத்துவா’ தான் ‘இந்து மதம்’ என்று அப்படியே நம்புபவர். அந்த இந்துத்துவாவின் படி கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியரையும் நாட்டை விட்டு விரட்டி விட்டால் இங்கே பாலாறும் தேனாறும் ஓடிவிடும் என்று நம்புபவர்.
டிரம்ப்-மோடி நட்பானது கிருஷ்ணர் – குசேலர் நட்பிற்கு இணையானது . அதனால் இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கான உத்திகளை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வகுத்துக்கொண்டிருப்பவர்.
Artificial intelligence, block chain, IOT, RPA போன்ற மிக நவீன சாப்ட்வேர் நுட்பங்களைப் பற்றி அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தது எனபது போன்ற மெசேஜ்கள் அவரது whatsapp inbox ஐ அடையும் போது மட்டுமே அதன் பிறவிப்பயனை அடைகின்றன.
அத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும் , தான் இருக்கும் whatsapp குழுக்களை போர்க்களமாகவும் , கருதிக்கொண்டு படபட வென forward செய்து பரவசமடைபவர்.
அப்படி forward செய்து கொண்டிருக்கும்போது அந்த மொபைல் hang ஆகி விட்டால், ஒரு வேளை உள்ளூர் கம்யூனிஸ்டுகள் சீன கம்யூனிஸ்டுகளிடம் தன்னைப் பற்றி சொல்லி அந்த சீனர்களால் தன் மொபைல் ஹேக் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு.
மேலே கூறப்பட்ட விஷயங்களில் ஒன்றாவது உங்களுக்கும் சரியென்று பட்டால் உங்கள் உடம்பில் சங்கி வைரஸ் புகுந்து விட்டது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
சங்கி வைரஸ் கொரோனாவை விட பயங்கரமானது.
ஜாக்கிரதையாக இருங்கள்.
— அருணாச்சலம் செந்தில்குமார். வாட்ஸப்பில்.