முஸ்லீம் மசூதிகளை முஸ்லீம்கள் நிர்வகிக்கும் போது, கிருத்துவ தேவாலயங்களை கிருத்துவர்கள் நிர்வகிக்கும்போது இந்து கோவில்களை இந்துக்கள் நிர்வகிப்பது தானே சரி ?, அதை ஏன் அரசு தடுக்கிறது ? என்று ரொம்ப லாஜிக்கா கேட்கிற மாதிரி ஒரு கேள்வியை இந்துத்துவ வெறியர்கள் பொதுவெளியில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இப்போது மட்டும் இந்துகோவில்களை முஸ்லீம்களும், கிருத்துவர்களுமா நிர்வகிக்கிறார்கள். இந்துக்கள் தானே நிர்வகிக்கிறார்கள்.இல்லையில்லை இந்து சமய அறநிலையத்துறை தானே நிர்வகிக்கிறதே என்று சொன்னால், அதில் திராவிடர் கட்சிக்காரர்களும் மற்ற மதத்தவரும் நிர்வகிக்கிறார்கள். அதனால் அந்தக் கோயிலின் வருமானங்களை கோவிலைத் தவிர பிற விஷயங்களுக்கும் செலவழிக்கிறார்கள் என்று பொங்குவார்கள்.
இந்துசமய அறநிலையத்துறையில் இருப்பவர்கள் இந்துக்கள் தானே! அவர்கள் என்ன வேற்று மதத்தை சேர்ந்தவர்களா? ஆம். இந்துக்கள் தான் இந்துசமய அறநிலையத்துறையில் அறங்காவலர்களாக வர முடியும். இந்து சமய அறநிலையத்துறையில் எழுதப்பட்ட சட்டமே இருக்கிறது.
இந்த துறையில் பணி வேண்டுமானால் கண்டிப்பாக அவர் இந்துவாகவும், அது மட்டுமின்றி கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும் இருக்க வேண்டுமென்று அப்படித்தான் இத்தணை ஆண்டுகள் பணிநியமனங்கள் நடைபெற்று வருகிறது. எங்கே ஒரே ஒரு மாற்றுமதத்தவரை இந்துசமய அறநிலையத்துறையில் இருக்கிறாரென்று காட்டுங்கள் பார்க்கலாம் ?
இப்படி இந்துகோவில்களை இதுநாள் வரையிலும் சரி இனியும் சரி இந்துக்களே நிர்வகிக்கும்போது ஏன் இந்த ஆர்.எஸ்.எஸ் பிஜேபி இந்து முன்னணி உள்ளிட்ட வலதுசாரி தீவிரவாதிகள் இந்துக்களிடம் கோவிலை ஒப்படையுங்கள் இந்துகளிடம் கோவிலை ஒப்படையுங்கள் என்று கூப்பாடு போடுகிறார்களென்றால், அவர்கள் இந்துக்களுக்கு கொடுக்கவேண்டுமென்று போராடவில்லை பார்ப்பனர்களுக்கு கோவிலை கொடுக்க வேண்டுமென்று சொல்வதற்குத்தான் மறைமுகமாக இந்து கோசத்தை போடுகிறார்கள்.
அப்போதுதானே சிதம்பரத்தில் நடராசர் கோவிலை எப்படி பார்ப்பன தீட்சிதர்கள் கொள்ளையடிக்கிறார்களோ அதேபோல எல்லா கோவில்களிலும் கொள்ளையடிக்கமுடியும்.
அறநிலையத் துறை கோவில்களின் சொத்துக்கள் முறையாக அரசு ஆடிட்டரால் தணிக்கை செய்யப்படும். கலெக்டர் ஒருவரால் அதன் நிர்வாகம் கண்காணிக்கப்படும். வரவு செலவுகள் அறங்காவலர் குழுவால் முறைப்படுத்தப்படும். அறங்காவலர் குழுவில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வந்தர்கள் போட்டி போட்டு முன் வருவார்கள். இவ்வளவு விஷயங்களைத் தாண்டியும் அதில் முறைகேடுகளும் நடக்கிறது. ஆனால் இந்துத்தவாவாதிகள் சொல்வது போல் மாற்று மதத்தவரால் செய்யப்படுவதல்ல. இந்துக்களாலேயே இந்துக் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன.
பொன்மாணிக்கவேல் செய்த சிலைகள் கடத்தல் பற்றிய விசாரணைகளில் பெரும்பாலும் கோவில் ஊழியர்களான இந்துக்களும், கோவில் அர்ச்சர்களுமே சிலைத் திருட்டுக்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பது வெளிச்சமாகியுள்ளது.
ஆகவே இவர்களின் இந்துக்களே ஒன்றிணைவீர் என்பதும், இந்துக்கோவில்களை இந்துகளிடம் கொடுங்கள் என்பதும், பார்ப்பனர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதாகுமேயன்றி இந்துக்கள் மீது உண்மையான அக்கறையினால் அல்ல.