பாக்கிஸ்தான் வீரர்கள் தாக்கினால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். மோடி முதல், அமித்ஷா வரை பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுவார்கள். தேசபக்தி புராணம் படிப்பார்கள். ஆனால் 840 தமிழக மீனவர்கள் சிங்கள அரசால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த போதும் அது எல்லை தாண்டிய பயங்கரவாதமில்லை. நம் தேசபக்தி அப்போது எங்கே போனது ?
நம் அரசுகள் ஐநாவில் கைகட்டி நின்று, அவர்களுக்கு என்ன சேவகம் செய்கின்றன என்பதை உலகளாவியம் என்கிற பெயரில் கொண்டு வருவது பற்றி எளிமையாக விளக்கம் தருகிறார். மத்திய, மாநில அரசுகளின் சந்தர்ப்பவாதச் செயல்களை விமர்சிக்கிறார் இந்தக் காணொலியில்..