இவ்வளவு காலமும் பேச்சிலர் வேசம் போட்டுக்கொண்டு, திருமண வழக்கத்தையும், பெண்களையும் நக்கலடித்துக்கொண்டிருந்த ராம்கோபால் வர்மாவுக்கு, விக்கல் ஏற்படும் அளவுக்கு நக்கலான புத்தகம் ஒன்று இன்று ஆந்திராவில் வெளியாகியுள்ளது.
‘வோட்கா வித் வர்மா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அப்புத்தகத்தில் ராம்கோபால் வர்மாவுக்கு ரத்னா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி, அவர்களுக்கு ரேவதி என்ற பெண்குழந்தை பிறந்த விவகாரம்,அடுத்து நடந்த விவாகரத்து தொடங்கி, இதுவரை வர்மா மறைத்து வைத்த மர்மங்கள் பலவும் வெளியிடப்பட்டிருக்கிறதாம்.
புத்தகத்தின் முக்கிய அம்சமாக ராம்கோபால் வர்மா குறித்து அவரது மனைவி ரத்னா பேசியிருப்பவை ‘காஃபி வித் ரத்னா’ என்ற தலைப்பிலும், மகள் ரேவதியின் பார்வையில் ‘டெவில்ஸ் டாட்டர்’ என்ற தலைப்பிலும் இடம் பெற்றிருக்கிறதாம்.
ஷிராஸ்ரீ என்கிற தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் எழுதியுள்ள இப்புத்தகம் பரபரப்பாக விற்பனையாக ஆரம்பித்ததைத்தொடர்ந்து, இதன் ஆங்கில,மற்றும் இந்தி மொழிபெயர்ப்பையும் வெளியிடும் முடிவை, புத்தகம் வெளியான நான்கே மணி நேரத்தில் பதிப்பாளர்கள் எடுத்தார்களாம்.
அட போங்கப்பு. இது அவ்வளவுமே ராம்கேவலவர்மாவின் செட்டப்பு, தன் பெயர் பரபரப்பாக அடிபட்டுக்கொண்டேயிருக்க, எதைவேண்டுமானாலும் செய்யத்தயங்காதவர் இந்த மொடாக்குடி வோட்கா வெறியர் என்கிற டாக்கும் இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.
அதுசரி, இந்தச்செய்திக்கு ஒரு சம்பந்தமுமில்லாம இந்த பொண்ணு போட்டோ என்னத்துக்குங்க?
இவங்க பேரு மஹிமா கில். ராம்கோபால் வர்மாவோட ‘நாட் எ லவ் ஸ்டோரி’ படத்தோட ஹீரோயின். கொஞ்ச காலமா வர்மாவோட வோட்காவுக்கு இந்த அக்காதான் ஷைடிஷாம்.
இந்த சம்பந்தம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?