முப்படைகளின் தளபதி பிபின் ராவத் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது பற்றி சுப்ரமண்யன் ஸ்வாமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இன்று பிபின் ராவத் வானூர்தி விபத்து நடந்து கருப்புப் பெட்டியிலிருந்து தகவல்கள் கிடைப்பதற்கு முன்பே இது இணையத் தொழில் நுட்பப் போர் (சைபர் வார்ஃபேர்) என்று சந்தேகம் தெரிவித்திருக்கிறார். சீனாவை பிபின் ராவத் தொடர்ந்து துணிவாக எதிர்த்து வந்ததிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். சீனாவின் பெயரைக் குறிக்கிறார். லேசர் கதிர்வீச்சின் மூலமாக விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார். சீனாவை எளிதில் எடைபோடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.
சீனா சைபர் வார் மேற்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரேல்-அமெரிக்காவுடைய குரல்களை சு.சுவாமி முன்கூட்டியே பிரதிபலிப்பவர்.
விபத்துக்குள்ளான Mi 17V-5 வானூர்தி புற ஊதா மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைக் (Ultra violet / Infra Red Rays) கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் கொண்டது, எவ்வளவு பனிமூட்டத்திலும் ரேடார் தொழில்நுட்பம் கொண்டு பயணிக்க முடியும். எனவே பனி மூட்டத்தால் இவ்விபத்து நடந்திருக்கும் என்பது பெரும்பாலும் நடக்க வாய்ப்பில்லாதது.
1991ல், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி அரசியல் படுகொலை செய்யப்பட்ட போது, அங்கிருந்து இராஜிவ் படுகொலைச் செய்தி சென்னைக்கே சென்று சேராத நிலையில் டெல்லியில் இருந்த சு.சாமிக்குக் கொலை பற்றித் தெரிந்திருந்தது. தமிழக காவல்துறை விசாரணையைத் தொடங்குதற்கு முன்பே விடுதலைப் புலிகள் இயக்கம்தான் படுகொலை செய்தது என்று முந்திக் கொண்டு தகவல் தந்தார்.
இப்போதும் சீனாவை நோக்கி இவ்விபத்தின் பார்வையைத் திருப்புகிறார். என்ன நடக்குமோ.