தமிழ் ரசிகர்களின் விருப்பமான தளமாக, தொடர் வெற்றிப் படங்களை தந்து வரும் ஜீ5 தளத்தில், அடுத்த  வெளியீடாக ஜனவரி 21, 2022 அன்று “முதல் நீ முடிவும் நீ”  திரைப்படம் வெளியாகிறது.

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டின் சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை மையமாகக் கொண்டு ஜனரஞ்சகமான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் திரை முன்னோட்டம் திரைப்பட குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் பேசியதாவது…

சினிமாவுக்கு நாங்க புதுசு,  நாங்க பண்ண முதல் படம் இயக்குனர் நலன் குமாரசாமி இணைந்து செய்த “உறியடி”  படம், நல்ல விமர்சனம் கிடைத்தது. அடுத்த படம் இது. இப்போதெல்லாம் படம் பண்றத விட அதை வெளியிடுவது மிகவும் கஷ்டமாக ஆகிவிட்டது. அதற்கு நிறைய தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது ஒரு கட்டத்தில் நானுமே நட்சத்திர நடிகர்களை வைத்து படமெடுக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. இந்தப் படத்தை  கொண்டு வர உதவிய ஜீ5 க்கு நன்றி. தர்புகா சிவா முதல் முறை சொல்லும்போதே இந்தக் கதை ரொம்ப பிடித்துவிட்டது. ஒரு இயக்குநரா சொன்ன விசயத்த சரியான நேரத்தில, சொன்ன பட்ஜெட்டை விட குறைச்சு, அழகா பண்ணி கொடுத்தார். எல்லோருமே அவங்களோட முழு உழைப்ப தந்திருக்காங்க. இந்தப் படம் எடுத்ததில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network, பேசியதாவது..

ஜீ5 வழங்கி வரும் படத்தொடரில் அடுத்ததாக  “முதல் நீ முடிவும் நீ” படத்தை வெளியிடுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை வெளியிடுவதில் உண்மையிலேயே நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய புது திறமையாளர்கள் அறிமுகமாகிறார்கள். ஒரு சில படங்களை மட்டும் தான் மேடையில் பெரும் நம்பிக்கையுடன் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும் அப்படியான படம் இது. படத்தில் ஒவ்வொருவரும் தங்கள் உட்சபட்ச உழைப்பை தந்துள்ளார்கள். அனைவருக்கும் உங்கள் ஆதரவு தேவை, படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.கௌசிக் நரசிம்மன், VP Content, ZEE5 Tamil பேசியதாவது…

ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் படத்தை விட இந்த முறை ரொம்ப எக்ஸைட்டோட  “முதல் நீ முடிவும் நீ” படத்தை அறிமுகப்படுத்துகிறேன். இது தமிழ் சினிமாவில் ரொம்ப முக்கியமான படமா இருக்கும். எல்லோரோட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இந்த படம் ஞாபகப்படுத்தும். இந்தப் படம் என்னோட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் பிரதிபலித்தது. படத்தில் நடித்தவர்கள் அந்த கேரக்டர் பேர் சொல்லி தான் இனிமே கூப்பிட முடியும், அப்படி ஒவ்வொருவரும் கலக்கியிருக்காங்க. இயக்குநர் தர்புகா சிவா கதை, திரைக்கதை உருவாக்கம் என  எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார். இந்தப் படம் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்  ஆதரவு தாருங்கள் நன்றி.
தர்புகா சிவா பேசியதாவது… 
 
எனக்கு முழு சுதந்திரம் தந்த சமீர் சாருக்கு நன்றி. இந்தப்படம் எழுத ஆரம்பித்தபோதே இதில் புதுமுக நடிகர்கள் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பு குழுவுக்கு நன்றி. இந்த படத்தில் நடித்த எல்லோரும் மூனு ஆடிசன் முடிச்சு தான் வந்தாங்க, 2 மாதம் ரிகர்சல் பண்ணி தான் ஷூட்டிங் போனோம். இந்த படத்தில் தங்கள் உயிரை தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ஷூட்டிங் முடிச்ச உடனே, லாக்டவுன் வந்துவிட்டது. இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் இருந்தது,  ஜீ5 தளத்தில் ஒரு நாளைக்கு எத்தனை படங்கள் பார்ப்பார்கள் என்பது எனக்கு தெரியும் அதைத் தாண்டி,  இந்தப் படத்தை பார்த்து, தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  “முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், K.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் CSV, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

‘நியூயார்க் திரைப்பட விருது விழாவில்,  ‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் சிறப்பு மிகு கௌரவ விருதை (Honourable Mention) வென்றுள்ளது மேலும், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது விழாவில் இத்திரைப்படம் ‘சிறந்த இயக்குனர்’ விருதினையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் டாக்கீஸ்  சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். 
“முதல் நீ முடிவும் நீ” படம் ஜனவரி 21, 2022 அன்று Zee5 இல் வெளியாகிறது.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.