கர்நாடகாவில் பள்ளியில் மத சம்பந்தமான உடையை பள்ளியினுள் அணிந்து வரக்கூடாது என்று கர்நாடகா அரசு போட்ட முட்டாள்தனமான சட்டத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகளைக் குறிவைத்து, ஹிஜாப் அணிவதை மிரட்டி நீக்கச் செய்யும் வன்முறைச் செயல்கள், கர்நாடகா முழுவதும் பாஜகவினராலும், ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படி ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை , பஜ்ரங்தள் அமைப்பின் தூண்டுதலில், கழுத்தில் காவித் துண்டு போட்டபடி  மாணவர்கள் கூட்டமாகச் சேர்ந்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி  தடுத்து நிறுத்த முனைந்தனர்.  அந்தக் கூட்டத்தைக் கண்டு கொஞ்சமும் கலங்காமல் அல்லாஹூ அக்பர் என்று பதில் குரல் கொடுத்தபடியே பள்ளிக்குள் சென்றார் அந்த மாணவி. இந்தக் காட்சி சமூக தளங்களில் வைரலாகி அந்த மாணவிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தபடி உள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாலாலாவும் ‘ஹிஜாப் அணிவதைத் தடுத்து ஒரு பெண்ணின் உரிமையை, கல்வியை பறிக்காதீர்கள்’ என்று இந்துத்துவ அமைப்புக்களின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

YouTube player

 

இதையொட்டி பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவரிடையே மத ரீதியான மோதல்களை உருவாக்கி அதன் மூலம் தேர்தல் வெற்றிகளை அடைய நினைக்கும் பாஜகவின் சதித்திட்டத்தை முறியடிப்போம் என்று இந்துக்கள் பலரும்  அழைப்பு விடுத்துள்ளனர்.

அவற்றில் சில கீழே..

தமிழகத்தில் | வலுக்கும் “ஹிஜாப்பிற்கான” ஆதரவு! தோழர் செந்தில் குமார் அவர்களின் மகள் ஹிஜாப் அணிந்து தனது ஆதரவை தெரிவித்தார்….

In tamil nadu i support for strengthening “hijab”! Comrade senthil Kumar expressed his support for their daughter wearing hijab


சகோதரி மகாலட்சுமி அவர்களின் வாட்ஸப் பதிவு
👇👇👇

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
தாலியும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
சந்தனப்பொட்டும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
திருநீரும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
உத்திராட்சைக்கொட்டையும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலையிட்டால் அதோடு அரசு நிறுவனங்களுக்கு வருவதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
கடவுள்(?) படங்களை அரசு நிறுவனங்களில் மாட்டிவைத்திருப்பதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
கையில் கயிறுகட்டி வருவதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
அரசு நிறுவனக் கட்டிடங்களுக்கு
பூமி பூஜை போடுவதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
அரசு நிறுவனங்களில் குத்துவிளக்கு ஏற்றுவதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
அரசு விழாக்களின்போது கற்பூரம் ஊதுபத்தி,தேங்காய்,எலுமிச்சை,வெற்றிலைப்பாக்கு இவைகளைப் பயன்படுத்துவதும் மத அடையாளம்தான்!

♟️ஹிஜாப் மத அடையாளம் என்றால்
சேலையும் மத அடையாளம்தான்!

▪️இங்கே பிரச்சனை சிறுபான்மையை ஏற்பதில்தான் உள்ளது.

▪️எல்லா மத அடையாளங்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்.ஆனால் பெரும்பான்மை என்ற பெயரில் சிறுபான்மையினம் ஒடுக்கப்பட்டால்
நாங்கள் ஒடுக்கப்படுபவர்களின் பக்கத்தில்தான் நிற்போம்.

▪️ஏனெனில்
நாங்களும் இந்திய ஒன்றியத்தின் பிரஜைகள்!

▪️நாங்களும் வரிச் செலுத்துகிறோம்!

▪️நாங்களும் வாக்களிக்கிறோம்!

▪️இது மன்னராட்சி நாடல்ல.இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இயங்கக் கடமைப்பட்ட மக்களாட்சி நாடு.சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Article 14-18).

Finally
அல்லாகு அக்பர் என்பது மத அடையாளம் என்றால்
ஜெய் ஸ்ரீராம் என்பதும் மத அடையாளம் தான்!

#hijab
#Allahuakbar


நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்துத்துவா அமைப்புக்களின் இச்செய்கையை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

“ஒரு இந்த நாட்டின் பிரஜையாக இதை கடுமையாக கண்டிக்கிறேன்.. ,இதுக்கு பின்னாடி யார் இருந்தாலும் சரி, பிள்ளைகளின் மனசை கெடுத்துடாதீங்க.. ப்ளீஸ்.. அதேபோல பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.. உங்க பசங்களுக்கு சொல்லி புரிய வையுங்க.. அந்த பெண்ணை ஹிஜாப் போட வேணாம்னு சொல்றதுக்கு இந்த பையன்களுக்கு என்ன உரிமை இருக்கு? உங்க வீட்டுல இருக்கிற அக்கா, அம்மாகிட்ட இதை பண்ணு, அதை பண்ணுன்னு சொன்னால் சும்மா இருப்பீங்களா?” – என்று மக்களிடம் கேட்கிறார் அவர்.


இந்திய அரசியல் சட்டத்தின் படி அனைத்து மக்களும் சமம். அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதனாலேயே எந்த மதமும் சாராத மதச் சார்பற்ற நாடாக இந்தியா இருக்கிறது. 

பாகிஸ்தானில் கூட இஸ்லாமிய மதத்துக்கு முன்னுரிமை உண்டு. அது இஸ்லாமிய நாடு என்று பகிரங்கமாகச் சொல்லிக் கொள்கிறது. அதனாலேயே மத அடிப்படைவாதம் பெருகி எழுவதை அந்நாட்டால் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது பல நேரங்களில்.

ஆனால், இந்தியா அப்படிப்பட்ட மதவாத நாடல்ல. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், மத ரீதியாக துவேஷம் பார்க்கக் கூடாது, மத நல்லிணக்கம் வேண்டும் , அதற்காக இந்த அரசும் மதச் சார்பற்றதாக நடந்துகொள்ளும்.  இதுதான் இந்தியாவின் ஆழமான ஜனநாயகத் தன்மை.

அதை அழித்து இதை இந்து நாடு என்று பாக்கிஸ்தான் போல ஆக்க இந்துத்துவா சக்திகள் ஆட்டம் போடுகிறார்கள். அதை மக்கள் கூடி நின்று எதிர்த்து தடுத்து, இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.