நவம்பர் 7ம் தேதி மாலை இந்தியாவிலிருந்து பாரிஸ் வழியாக அமெரிக்கா சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் அமெரிக்காவின் சிகாகோ ஒஹேர் இன்டர்னேஷனல் ஏர்ப்போர்ட்டுக்கு ஒரு வி.ஐ.பி வந்திறங்கினார்.
ஏர்ப்போர்ட் இமிக்ரேஷன் அதிகாரிகள் அவருக்குப் பின்னிருந்த பறக்கும் படையைக் கண்டதும் எந்த நாட்டு அதிபரோ என்று
தங்கள் மண்டையைச் சொறிந்து யோசித்துக் கொண்டிருக்க படபடவென அணிவகுத்துக் கிளம்பிய நான்கு கார்களில் நடு காரில் ஜம்மென அமர்ந்திருந்தார் அந்த வி.ஐ.பி, நம்ம பவர் ஸ்டார்.
இதற்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க ஒபாமாவே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று செய்திகள் வந்தவுடன் ‘நான் சொன்னமாதிரியே நடந்திச்சா இல்லியா’ என்று சந்தோஷத்தில் கார் ஸீட்டைக் குத்தினார் நம் பவர்.
நேராக விரைந்த கார் ஒபாமா பேசவிருந்த ஆடிட்டோரியத்தின் வாயிலில் போய் நிற்க அதிலிருந்து குதித்திறங்கிய பவர் ஸ்டார் கூட்டத்தில் மக்களோடு மக்களாக வந்த வெள்ளத்தில் தன் பறக்கும் படை வழி அமைத்துக் கொடுக்க கிடைத்த இடைவெளியில் ஒபாமா கையைப் பிடித்துக் குலுக்கினார்.
அவரை சிகாகோ மாநிலத்தில் உள்ள இந்திய வம்சாவழியின் செனட்டரோ என்று நினைத்த ஒபாமாவும் பதிலுக்கு கைகுலுக்கி அவரைத் தழுவி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இவ்வாறாக வெற்றி பெற்ற ஒபாமாவை சந்தித்து வாழ்த்துச் சொன்ன முதல் இந்தியர் என்கிற பெருமை நம் பவர்ஸ்டாருக்குப் போய்விட்டது.