இப்படி ஒரு பெயர் வைத்த தோஷமோ என்னவோ தெரியவில்லை, கடந்த ஞாயிறன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த ‘பரதேசி’ பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட பெண் நிருபர் ஒருவர் தனது மூன்று பவுன் வளையலைத் தொலைத்து பரதேசியானார்.
முன்னணி நாளிதழ் ஒன்றில் பின்னணி , அதாவது ஃப்ரீலான்ஸ், நிருபராக வேலைபார்க்கும் அந்த நிருபரின் பெயர் கவிதா.இவரை சக
நிருபர்கள் செல்லமாக ‘கருப்பு தமண்ணா’ என்றும் அழைத்து மகிழ்ந்து வந்தனர்.
படம் துவங்கியதிலிருந்து இதுவரை ‘பரதேசி’ தொடர்பாக செய்திகள், புகைப்படங்கள் எதுவும் வழங்கவில்லையே, அதனால், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட கவிதா, இரண்டு கைகளிலும் தலா மூன்று பவுன்களில் தங்க வளையல் அணிந்திருந்தார். பிரஸ்மீட் முடிந்து தனது டூ-வீலரை ஸ்டார்ட் பண்ணபோனபோது, ஒரு கையில் வளையலக்காணாமல் திகைத்த கவிதா,சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள நகை காணாமல் போனதில், ஒரு கணம் தன்னை பெண் பரதேசி போலவே உணர்ந்தாராம்.
இதற்கு முன்னர் நடந்த பிரஸ்மீட்கள் எதிலும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததில்லை எனும் நிலையில், எடுத்தவர்கள் யாராவது கொண்டு வந்துகொடுத்துவிடுவார்கள் என்று இரு தினங்கள் காத்திருந்த கவிதா, நேற்று மாலை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறாராம்.
ப்ரஸ் மீட்டிலேயே வந்து திருடும் அளவுக்கு தைரியமாய் திருடர்கள் எப்படி ஆகிப் போனார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
எந்தப் பரதேசி திருடிட்டுப் போனானோ?