படத்தில் நம்ம பொன்வசந்தி சமந்தா அருகே இருப்பது, அவரது டூப்போ அல்லது ஒண்ணுவிட்ட சித்தி மகளோ என்று கன்ஃபியூசியஸ் ஆகவேண்டாம். சாட்சாத் அவரும் சமந்தாவே தான்.
சமீப சிலகாலமாக சரும உபாதைகளால் சங்கடப்பட்டுக்கொண்டிருந்த சமந்தா, இரண்டாவது டெலிவரிக்கு அப்புறம்
லேடீஸ் கு.க. அறுவை சிகிச்சை செய்துகொள்வது மாதிரி, சரும நிவாரணத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, லேசாக தனது கிளிமூக்கையும் ப்ளாஷ்டிக் சர்ஜரி செய்துபார்த்தாராம்.
அதன் ரிசல்ட் ஏறத்தாழ ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் ரிசல்ட் போலவே படு சொதப்பலாக முடியவே, டாக்டர்கள் மேல் மூக்குக்கு மேல் கோபம் வந்து, படப்பிடிப்பில் ரீ-ஷூட் மாதிரியே ரீ- ஆபரேஷன் செய்து அவசர அவசரமாக பழைய மூக்கியாக மாறினாராம்.
ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து வச்சமாதிரியே எல்லாருக்கும் எல்லாத்தையும் அளந்துதான் வச்சிருக்கான்கிறதை ஏன் தான் பலபேரு ஏத்துக்க மறுக்குறாங்கன்னு தெரியலையே?