கமலின் ‘விஸ்வரூபம்’ பொங்கல் போட்டியிலிருந்து பொங்கி அழுதபடி வெளியேறிக்கொள்ள தற்போது, விஷாலின் ‘சமர்’, கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி படிக்க இருக்கும் ‘புத்தகம்’ ஆகிய படங்களுடன் பவர்ஸ்டார் நடிக்கும் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ ஆகிய நான்கு படங்கள் ரிலீஸாகின்றன.
இதில் ‘புத்தகம்’ படம் குறித்து சத்தம் எதுவும் இல்லாமல் இருக்க
மற்ற மூன்று படங்களுமே பெரும் பஞ்சாயத்துக்களுக்கு மத்தியிலேயே ரிலீஸாகின்றன.
கவுண்டரைத் தொறக்குறதுக்குள்ள ஒரு வாரத்துக்கு புக்கிங் ஹவுஸ்ஃபுல் என்று கூலா பீலா விடும் ’அலெக்ஸ் பாண்டியன்’ கோஷ்டிகள், பட இயக்குனருக்கு பேமெண்டில் பெரும் தொகையை பெண்டிங் வைத்துவிட்டார்களாம். கேட்டதற்கு ’படம் பிசினஸ் ஆனதுக்கு எங்க கம்பெனியும் ஹீரோவும்தான் காரணம். ரிலீஸ் வரைக்கும் சங்கம் எதுலயும் கம்ப்ளெயிண்ட் பண்ணாம சைலண்டா இருந்தீங்கன்னா,படம் பெரிய ஹிட்டான உங்களுக்கு மீதி துட்டு தருவோம்’ என்று அன்பாக சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.
அடுத்தது’ சமர்’. எப்போது இப்படி ஒரு பெயர் வைத்தார்களோ அப்போது முதலே படம் முழுக்க, விஷால் சம்பளம் முதல் புரடக்ஷன் ஆள் சம்பளம் வரை நான்ஸ்டாப் பஞ்சாயத்துதான். எல்லாம் சமாளித்து ரிலீஸுக்கு நெருங்கும் வேளையில் 1.50 கோடி செட்டில்மெண்ட் கேட்டு ஜெமினி லேப் கோர்ட்டுக்குப் போக, தயாரிப்பாளருக்கு தாவு தீர்ந்துவிட்டது. இப்பொதைக்கு 13 ரிலீஸ்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படம் ‘வரும் ஆனா வராது’ என்கிற நிலையில்தான் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து சமர் செய்துகொண்டிருக்கிறது.
ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கும் சந்தானத்தின் திருட்டு லட்டு’ கதையை பாக்யராஜும், சுந்தர் நவீன் என்கிற உதவி இயக்குனரும் சொந்தம் கொண்டாடி கமிஷனர் ஆபிஸ் வரை கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கும் நிலையில், ‘படத்துல கதையே இல்லை. அப்புறம் எப்பிடி கண்டவங்க எல்லாம் சொந்தம் கொண்டாடுறாங்க’ என்று சந்தானம் அறிக்கை எல்லாம் எழுதி தயாராக வைத்திருந்தாராம். படம் ரிலீஸான பிறகு மக்களே அதை தெரிஞ்சிக்கப்போறாங்க. அதுக்கு முந்தி நீ ஏன் தேவையில்லாம டென்சனாகி ஓப்பனிங் கலெக்ஷனைக் கெடுக்கப்பாக்குறே?’ என்று அவரது பார்ட்னர் ராமநாராயணனும், மற்றொரு டுபாக்கூர் பார்ட்னர் பவர்ஸ்டார் ஸ்ரீலiஸ்ரீ ஸ்ரீனிவாசனும் அட்வைஸ் பண்ண சைலண்டாகிவிட்டாராம் சந்தானம்.