misskin-lonewolf-productions

மிகவும் வித்தியாசமான பெயர்..நம்மில் பலருக்கு இந்த பெயர் புரியாமல் போகலாம்,. நமது தினசரி வாழ்வியலோடும் சிந்தனைகளோடும், செயல்முறைகளோடும் ஒன்றியமயாமல் போகலாம்..தீராத கற்பனை வளமும், தன்னை ச்சுற்றி ஒரு தனி உலகத்தை உருவாக்க  அதீத தைரியமும், துணிச்சலும்  கொண்ட ஒருவரால் மட்டுமே ‘LONE WOLF’  என்ற பெயரை சிந்தித்து அதனை தன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயராகவும் வைக்க முடியும்.

அவர் வேறு யாருமல்ல. புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனராக இருந்து ‘முகமூடி’ ரிலீஸுக்கு அப்புறம் வாய்மூடி மவுனியாய் அலையும் இயக்குனர்  மிஷ்கின். ‘ LONE WOLF ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை  ஆரம்பித்து தனது அடுத்த படைப்பை விரைவில் துவங்க உள்ளார்.

இதனை பற்றி மிஷ்கின் பேசுகையில், ” என்னை மிகவும் கவர்ந்த மிருகம் ஓநாய். அதன் குணாதிசயங்கள் மிகவும் விசித்திரமானவை, சுவாரஸ்யமானவை..பொதுவாக ஓநாய்கள் கூட்டமாக திரியும், கூட்டமாகவே இரையை தாக்கும் என கேள்விபட்டிருக்கிறோம்..அனால் சில ஓநாய்கள் மட்டும்[ நம்ம அண்ணன் மிஷ்கினைப்போல்]  எந்த ஒரு கூட்டத்தோடும் சேராமல், தன்னந்தனியே கம்பீரமாக வாழும். அவற்றை LONE WOLF என கூறுவார். அந்த குணாதிசயங்களும், வாழ்வு முறையும்  என்னை கவர்ந்ததால் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு’ LONE WOLF’ என்ற பெயரை சூட்டினேன்..விரைவில் தொடங்க உள்ள எனது அடுத்த படத்தில் தொடங்கி இனி  எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய தரமான நல்ல படங்கள் தர உள்ளேன்” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

சரி படத்துல ஓநாய் யாருன்னு அவரே சொல்லிட்டார். அப்ப ஆடு எங்கேன்னு கேக்காமயா இருக்கப்போறீங்க. இனிமே, அடுத்த படத்துக்கு அண்ணன் கிட்ட சிக்கப்போற தயாரிப்பாளர்களும், கதாநாயக, நாயகிகளும் தான் அது அப்பிடிங்கிறதை நாங்க எப்பிடிங்க சொல்ல முடியும்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.