சி.சத்யாவின் இசையில் சில்லுன்னு ஒரு காதலை இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் நெடுஞ்சாலை படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். புதுமுகங்கள் ஆரி, ஷிவதா ஜோடியாக நடிக்கும் இப்படம் 1980ல் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படமாம். சி.சத்யாவின் இசையில் பெரும்பாலான பாடல்கள் ஓகேவாகின்றன. சத்யா தேறி வருகிறார்.
1. நண்டூறுது – பழனி அம்மாள், சின்னா.
சிரிச்சு சிரிச்சு வந்தா சினா தானாடோய் பாடலை ஞாபகப்படுத்தும் ஒரு டப்பாங்குத்துப் பாடல். பழனியம்மாளின் குரல் புதிதாய் கணீரென்று கிராமியப் பாடலை ஒலிக்கிறது.
2. தாமிரபரணி – சி.சத்யா
இசையமைப்பாளரே பாடியுள்ள மெலடிப் பாடல். தான் காதலிக்கும் பெண்ணை வியந்து காதலன் பாடும் பாடல். ஹிட்டாகும் வாய்ப்பு உள்ள மெலடி. பாடல் வரிகள் நன்றாயிருக்கிறது.
சத்யா ரசித்துப் பாடியிருக்கிறார்.
3. இவன் யாரோ – மாதுஸ்ரீ
நாயகி நாயகனை மனதில் நினைத்துப் பாடும் மெலடி பாடல். சிறிய பாடல். நன்றாக இருக்கிறது. ஓகேயாகி விடும். மாதுஸ்ரீயின் குரல் பரவாயில்லை.
4. இஞ்சாதே – ரூப்குமார் ரதோட், மாதுஸ்ரீ, யாஸின்
வெஸ்டர்ன், கர்நாடகம், கவ்வாலி, மலையாளக் கதகளி என்று பல வகை ட்ரெண்டுகளை கலந்து தந்திருக்கிறார் சத்யா. பாடல் நன்றாகவே இருக்கிறது. ரூப்குமார் ரத்தோட் மற்றும் மாதுஸ்ரீயின் குரல்கள் பாடலுக்கு மெருகூட்டுகின்றன. இஞ்சாதே என்ற புதியதொரு தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர். அதன் அர்த்தம் என்ன சார்? ஒருவேளை ஏதாவது ஹிந்தி வார்த்தையா ?
5. வைகைநதி காத்தே – சி.சத்யா, பவானி.
எந்தவொரு பேஸ் கருவிகளும் இல்லாமல் அமைதியாய் வந்து போகும் மெலடிப்பாடல். பவானியின் குரல் நன்றாக இருக்கிறது.
5. கடல் தாண்டி – எலிசபெத் மாலினி, தீரஜ் கேர்
வித்தியாசமாக வெஸ்டர்னையும் விருமாண்டி டைப் இளையராஜாவின் பாட்டையும் கலந்து போட்டது போல வரும் பாட்டு. ஹெவி மெட்டல் டைப் எலெக்ட்ரிக் கிடார்கள் கலங்குகின்றன. ஏதோ ப்யூசன் டைப் பாடல் போலத் தெரிகிறது. ஹிட்டாகுமா என்றால் சந்தேகம்
படத்தின் பெரும்பாலான. பாடல் வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆடியோ ஆல்பம் கையில் கிட்டாததால் யார் யார் எந்தப் பாடல்களை எழுதினார்கள் என்று தெரியவில்லை. தாமிரபரணி, இஞ்சாதே, வைகைநதி போன்ற பாடல்களின் வரிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
படம் ஹிட்டானால் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். படத்தின் எல்லாப் பாடல்களிலும் எனக்குப் பிடித்த பாடல் இஞ்சாதே.
-மருதுபாண்டி