தெலுங்குப் படஉலகில் நல்ல ஹீரோவாக வலம் வரும் கோபிசந்த் முதன்முறையாக தமிழில் நயன்தாராவுடன் நடிக்க இருக்கிறார். காரணம் யார் என்று பார்த்தால் அது நயன்தாராவே.
தெலுங்குக்காரரான இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க கால்ஷீட் கேட்டு நயன்தாராவுக்கு ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். பூபதி பாண்டியனுக்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோக தயாரிப்பாளர் நயனிடம் போய் அட்வான்ஸை திரும்ப வாங்கப் போயிருக்கிறார். நயனோ அவர் போயிட்டா என்ன சார் நான் கால்ஷீட் தர்றேன் நீங்க வேறு டைரக்டரை போட்டு எடுங்கோ என்று அட்வான்ஸைத் தராமல் அனுப்பிவிட்டாராம்.
சரி நயனை வைத்து படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்த தயாரிப்பாளர் தனது ஆஸ்தான ஹீரோ கோபிசந்த்தை அணுகி தமிழிலும் நடிக்க விருப்பமா என்று கேட்க, அவரும் ஓ.கே. சொல்லி விட ஏ.வி.எம்மில் பூஜைபோட்டு வேறு ஒரு இயக்குனர் போட்டு படத்தை ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட நாட்கள் படபூஜைகளுக்கு வராதிருந்த நயன்ஸ் இதில் வந்து கலந்து கொண்டது நைஸ் என்று ஜொள்ளுமகா சபையின் தலைவர் ஜொல்லினார்.