“திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன். அப்படியே நடித்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கமாட்டேன்.” என்று சினிமா உலகிற்கு தற்காலிக முழுக்குப் போட்டிருந்த சினேகா ‘உன் சமையலறையில்’ படத்தில் நடித்த அழகான இல்லத்தரசி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இனிமேல் பெரும்பாலும் இதுபோன்ற இல்லத்தரசி வேடங்கள்தான் வரும். அதிலும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கத் தேவைப்பட்டால் நடிக்கவும் செய்வேன் என்றும் கூறிவிட்டாராம். இதுபற்றி கணவர் ஆட்சேபிக்கமாட்டாரா என்று கேட்டதற்கு
“திருமணம் வேறு. தொழில் வேறு. நானும் என் கணவரும் எங்கள் தொழிலான சினிமாவை மதிக்கிறோம். அதற்கான புரிதலும் எங்களிடையே உள்ளது. அதற்காக நான் காட்சிக்குத் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று சொல்லமாட்டேன்.” என்கிறார்.
அழகான இல்லத்தரசி கதைகள் வைத்திருப்பவர்கள் உடனே சினேகா மேடத்தை அனுகுங்கள். கால்ஷீட் ரெடி.