தமிழில் வித்தியாசமான கதையமைப்புக்கள் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளன. ஒருவரே நடித்த படம், வாயை மூடப் பேசவும் போல யாருமே பேசாத படம் என்று வித்தியாசமான படங்கள் உண்டு.
அதில் தற்போது புதிதாய் இணைந்திருக்கும் படம் ‘லட்டுக்குள் பூந்தி’. இந்தப் படத்தில் என்ன புதுமை? படத்தில் நடிக்கும் பெண்கள் எல்லாம் ஆண்கள் போலவும் ஆண்கள் எல்லாம் பெண்கள் குணத்துடனும் நடந்துகொள்வது தான் அந்த வித்தியாசம்.
“லட்டு என்பது இந்த உலகம் என்றால் அது நிறைய ஆண்கள் மற்றும் பெண்கள் எனப்படும் பூந்திகளால் ஆனது. இந்த உலகத்தில் ஆண்கள் எல்லாம் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்ற ஒருவனின் கனவுதான் கதை. படத்தில் ஆண்கள் ஆண்களாகவே தோற்றமளித்தாலும் பெண்கள் போன்ற மென்மையான தன்மையுடன் இருப்பார்கள். பெண்கள் பெண்களாகவே தோற்றமளித்தாலும் ஆண்களைப் போல முரட்டுத்தனமாக இருப்பார்கள். இந்தக் கோணத்தில் உலகம் எப்படி இருக்கும் என்பதை பதிவுசெய்வது தான் இந்தப் படம்” என்கிறார் படத்தின் இயக்குனர்.
படத்தின் இயக்குனர் பெயரும் வித்தியாசமானதுதான் – ‘ஜீன்ஸ்.