robin-williams-death

அமெரிக்க காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் ‘குட்வில் ஹன்டிங்'(Goodwill hunting), ‘பேட்ச் ஆடம்ஸ்'(Patch Adams), ‘மிஸஸ் டவுட்பயர்'(Mrs DoubtFire) போன்ற ஆங்கிலப் படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.  அவர் கடந்த 11ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள்.

63 வயதாகும் ராபின் வில்லியம்ஸ் ‘ஸ்டேண்டப் காமெடி ஷோ'(Stand-up Comedy Show) எனப்படும் தனிமனித நகைச்சுவை மேடைப் பேச்சுக்களின் மூலம் பிரபலமானார். எண்ணற்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவருடைய முதல் படம் 1977ல் வந்த கேன் ஐ டூ இட் டில் ஐ நீட் க்ளாஸஸ்(Can I do it till I need glasses) என்கிற காமெடிப் படம்.

குட்மார்னிங் வியட்நாம் படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1997ல் குட் வில் ஹன்டிங் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணைநடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். அவர் நடித்த மிஸஸ் டவுட்பயர் படத்தைத் தான் அவ்வை சண்முகி என்கிற பெயரில் நமது உலகநாயகன் உரிமமில்லாத ரீமேக் (?) செய்தார்.

மூன்று முறை திருமணம் செய்துகொண்ட ராபின் வில்லியம்ஸ் ஒரு சமூக ஆர்வலரும் கூட. அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். 1980களில் கோக்கெய்ன் எனப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானார் ராபின் வில்லியம்ஸ். பின்பு நலவாழ்வு மையத்துக்குச் சென்று அதிலிருந்து விடுதலை பெற்றார். பின்னர் 2003ல் மீண்டும் மதுவுக்கு அடிமையானார். இது தவிர மன அழுத்தம்(depression), இருதுருவ மனநோய்(Bipolar Disorder) போன்றவையும் அவருக்கு இருந்தன.

குடிப்பழக்கததிலிருந்து மீள்வதற்காக அவர் மீண்டும் மறுவாழ்வு மையத்துக்குச் சென்றுள்ளார். அவருடைய மரணம் ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிபர் பராக் ஒபாமா உட்பட பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். பெரும் நடிகர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்திருப்பது அனைவரும் யோசிக்கவேண்டிய விஷயமாகும். திரும்பி வர வாய்ப்புக்கள் வசதிகள் இருந்தும் மீளமுடியாத நிலைக்குச் சென்றிருக்கிறார் அவர். நம் ஊர் டாஸ்மாக் வாசலில் காலை பத்துமணிக்கு டாணென்று ஆஜராகும் அன்றாடங்காய்ச்சிகளுக்கு என்ன நிகழும்?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.