தொடர்ந்து மூன்று தோல்விப்படங்களைக்கொடுத்தாலும், இன்னும் ஓரளவுக்கு மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது நடிகர் விஜய்சேதுபதிக்கு. இவரது அலுவலகமும் முன்னாள் தயாரிப்பாளரும் இன்னாள் மீடியேட்டருமான டி.சிவா பணியாற்றி வரும் வேந்தர் மூவிஸ் அலுவலகமும் அருகருகே இருக்கிறது.
ஒருநாள் திடீரென விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம் டி.சிவா. ஒரு காலத்தில் விஜயகாந்த்தையெல்லாம் வைத்து படமெடுத்த
தயாரிப்பாளராச்சே? சார்… நீங்க சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே? நீங்க என் ஆபிஸ் தேடி வரணுமா என்றெல்லாம் அவரிடம் மிகுந்த மரியாதை செலுத்தியிருக்கிறார் டி.சிவாவும். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ள தெரிய வேண்டுமல்லவா? அங்குதான் வழுக்கி விழுந்துவிட்டார் சிவா.
நம்ம வேந்தர் மூவிசுக்கு நீங்க ஒரு படம் பண்ணனும் என்று இவர் கேட்டாராம். அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி. உங்க நிறுவனத்தில் நடிக்க நான் ஆவலா இருக்கேன். எப்ப வேணும்னாலும் சொல்லுங்க என்று அனுப்பி வைத்திருக்கிறார். இப்படியே சில நாட்கள் கழிந்தன. திடீரென ஒரு நாள் விஜய் சேதுபதியிடம் டீலிங் பேச ஆரம்பித்தாராம் டி.சிவா.
நான் வேந்தர் மூவிஸ்ல உங்களுக்கு நல்ல சம்பளம் வாங்கி தர்றேன். ஆனால் நான் வாங்கி தர்ற சம்பளத்தில் நீங்க வழக்கமா வாங்குற சம்பளத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை என்னிடம் கொடுத்துவிடணும் என்றாராம். இதில் அதிர்ச்சியாகிவிட்டார் விஜய் சேதுபதி. நான் கமிஷன் கொடுத்துதான் பட வாய்ப்பு வாங்கணும் என்ற நிலைமையில் நான் இல்லை. அது மட்டுமில்ல. நான் கஷ்டப்படுற காலத்தில் கூட இப்படி கமிஷன் கொடுத்து பட வாய்ப்பு வாங்கணும்னு நினைச்சதில்லை. அதனால் போயிட்டு வர்றீங்களா என்று அனுப்பி வைத்தாராம்.
டி.சிவா அங்கு இருக்கும் வரை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் தருவதில்லை என்கிற முடிவையும் எடுத்தாராம்.
வழக்கமாக தயாரிப்பாளர்களிடமிருதுதான் ‘கட்டிங்’ போடுவார்கள். ஆனால் தயாரிப்பாளரே கட்டிங் போட்டால்..? சிவ சிவா…