உரைக்கும் உண்மையும் அதை சார்ந்த கடினமான சம்பவங்களும் எப்பொழுதும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். ‘பட்டர’ என்ற தலைப்பில் ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்தி குமார் தயாரிக்கும் புதிய படம் ,
நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை. மனித உருவில் வலம் வரும் மிருகங்கள் இடையே வாழும் ஒரு இளைஞன் விண்வெளி துறையில் சாதிக்க விரும்புகிறான்.அவனது வானுயர்ந்த எண்ணங்கள் அவனது வாழ்வில் சந்திக்கும் சில சம்பவங்களால் கீழே விழுந்து நொறுங்கி போகிறது.
அவன் இருந்து இருக்க கூடாத ஆனால் இருந்து விட்ட ஒரு சூழ்நிலை அவனது வாழ்கையை புரட்டி போடுகிறது.சமூகத்தின் இரு பெரிய தூண்கள் இடையே அவன் ஒரு துரும்பாக நுழைந்து ,எப்படி ஒரு ஆயுத கிடங்காக மாறி எப்படி அழிக்கிறான் என்பதே ‘பட்டர’ படத்தின் கதை அம்சம். சமூகத்தின் அவலமான இரு பெரிய துருவங்களின் போர் எப்படி அப்பாவி மக்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அறிமுக இயக்குனர் ஜெயந்தன் படம் பிடித்து காட்டி உள்ளார்.
ஜெயந்தன் ஜெயிப்பாரா ? அல்லது சறுக்குவாரா ? என்ற கேள்விக்கு ‘பட்டர்’ திரையில் வெளிவந்து விடை தருவார்.