தெலுங்கில் பவண் கல்யாணுடன், நம்ம ஸ்ருதி கமல் ஜோடி போட்ட ‘கப்பார் சிங்’ தான், ஆந்திராவின் லேட்டஸ்ட் சூப்பர் டூப்பர் ஹிட் படம். இன்னும் இரு வாரங்களில் வசூலில் இந்த கப்பார்தான் ஆல்டைம் ரெகார்டாக நிப்பார் என்று ஆந்திராவாலாக்கள் அடித்துச்சொல்கிறார்கள்.
ஆனால் இந்த வெற்றியை நெற்றியில் ஏற்றிக்கொள்ளாமல், தமிழிலும் ,தெலுங்கிலும் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல், அவ்வளவு ஏன் யாரிடமும் கதை கூட கேட்காமல், வெகு சகஜமாக உலாவருகிறார் ஸ்ருதி.
‘’எனது முந்தைய படங்கள் தோல்வி அடைந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இருக்கிறேன். ஒரு படம் ஹிட்டானவுடன் அட்வான்ஸ்களை வாங்கி குவித்துப்போட்டு, அரைடஜன் படங்களில் கமிட் ஆகி, ‘நான் தான் இப்போ நம்பர் ஒன்’ என்று சொல்லிக்கொள்ளும் மனநிலை, இப்போது மட்டுமல்ல எனக்கு எப்போதுமே வராது. எனவே புதுப்படங்களில் நடிப்பதற்கு எனக்கு எந்த அவசரமும் இல்லை.ஏற்கனவே தமிழிலும் தெலுங்கிலும் குறுகிய காலத்தில் அதிகப்படங்களில் நடித்துவிட்டோமோ என்ற எண்ணம் கூட எனக்கு அவ்வப்போது ஏற்படுகிறது.’’ என்று தடாலடியாக அறிவிக்கும் ஸ்ருதியை, கப்பார் சிங்’ ரிலீஸுக்கு பின்னர் தினமும் மூன்று அல்லது நான்கு தெலுங்கு ஆஃபர்கள் தேடிவருகிறதாம்.
ஆனால் ஸ்ருதியின் மனமெங்கும் தனியாக ஒரு இசை ஆல்பம் வெளியிடுவதிலேயே லயித்திருக்கிறதாம்.
‘’ஒரு இசை ஆல்பம் தனியாக வெளியிடுவது குறித்து, சிலமாதங்கள் முன்புவரை, சற்றே நம்பிக்கையற்று இருந்தேன். இப்போது முழு நம்பிக்கை வந்துவிட்டது.மேலும் எனது இசைஞானத்தை வளர்த்துக்கொள்வதற்காக இப்போது அதிகம் தனியார் பேண்ட் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். எனவே இனி ஒரு ஆல்பமாவது வெளியிட்டபிறகுதான் சினிமா’’
குட்டிக்கமல் போலவே சமர்த்தாகப்பேசுகிறார் கமல்வீட்டு கன்னுக்குட்டி.