கமலின் 60 வது பிறந்தநாள் தமிழகமெங்கும் தாரைதப்பட்டையோடு கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்க, இதே நவம்பர் 7-ல் தான் அனுஷ்காவும் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இவரது பிறந்தநாளையொட்டி, தெலுங்கில் இவர் நடித்துவரும் மெகா பட்ஜெட் படமான ‘ருத்ரம்மா தேவி’யின் போஸ்டர் டிசைன் ஒன்றையும் வீடியோ டீஸர் ஒன்றையும் ‘ருத்ரம்மா இயக்குநர் குணசீலன் வெளியிட்டுள்ளார்.
ரூ.50கோடி செலவில், ஒரு ஹீரோயினை மய்யப்படுத்தி எடுக்கப்படும்,முதல் மெகா பட்ஜெட் படம் இது. இதில் அனுஷ்காவுடன் நித்யா மேனன், ‘மெட்ராஸ்’ நாயகி கேதரினும் நடிக்க, தெலுங்கின் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் ஜனவரி 2015 – ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் இசை நம்ம இசைஞானி இளையராஜா.
வீடியோ லிங்க்
