வாங்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷா ருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டை போட்டது, பாக்கவே ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருந்ததே? ஷியாம், நாகர்கோயில்.
பாதுகாப்பு அதிகாரியோ ஷா ருக் கான் சரக்கடித்துவிட்டு தன்னோடு சண்டை போட்டதாகச்சொல்கிறார். ஷா ருக்கோ குழந்தைகளுக்காக பரிந்து பேசினதை ஊதிப்பெரிதாக்கிவிட்டார்கள் என்கிறார்.
நடந்தது என்னவாக இருந்தாலும் நான் ஷாருக் என்கிற குழந்தையை ஆதரிக்கவே விரும்புகிறேன்.
‘வழக்கு எண் 18/9’ வசூல் ரீதியாகவும் பெரிய பெற்றிப்படமா? பன்னீர்ச்செல்வம், சென்னை.
எனக்கு கிடைத்த தகவல்படி, ஏ’ செண்டர்கள் தவிர்த்து படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
ஆனால் இலக்கிய வட்டாரங்களில் படம் செம ஹிட். படத்தில் பாலாஜி சக்திவேலுக்கே தெரியாத ‘தொன்மங்கள்,படிமங்கள், குறியீடுகளையெல்லாம் கண்டுபிடித்து கொண்டாடுகிறார்கள்.
அடுத்தடுத்த வாரங்களில் தமிழ்சினிமாவை புரட்டிப்போட்ட இரண்டு படங்கள்’ என்று ‘ராட்டினம்’ படத்துக்கு விளம்பரம் செய்கிறார்களே? மனோகரன், திருச்சி.
இவங்க என்ன புரட்டிப்போடுறது ? தமிழ்சினிமா ஏற்கனவே தலைகுப்புற கவுந்துதான் கிடக்குதுன்றேன்.
விகடனிலிருந்து மதன் வெளியேற்றப்பட்டது குறித்து கிளியாரின் கருத்து? கண்ணபிரான், தேனி.
ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதைத்தாண்டி, மதன் செய்த எதையுமே நான் ரசித்ததில்லை. அவர் சுஜாதாவுக்கு இணையான ஒரு எழுத்தாளர் போலவும், கரைகண்ட சினிமா விமரிசகர் போலவும் ஒரு பிம்பத்தை உண்டாக்கிய பெரும்பாவம் விகடனையே சாரும். அவர் வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு எந்திரன் அவ்வளவே.
’அம்மாவின் ஜால்ரா’ என்று இப்போது மிக அசிங்கப்படுத்தி அவரை விகடனிலிருந்து வெளியேற்றியதன் மூலம், அந்தப்பாவத்தில் ஒரு ஐந்து சதவிகிதம் குறைந்திருக்கிறது விகடனுக்கு.
ஆமா, விகடன்ல, நடுநிலை நடுநிலைன்னு ஏதோ சொல்றாங்களே, அது கிலோ என்ன வெலப்பா?